பாஜவுக்கு 3முறை வாய்ப்பு தந்தீர்கள்; எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் :ராகுல்

மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2018, 07:45 PM IST
பாஜவுக்கு 3முறை வாய்ப்பு தந்தீர்கள்; எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் :ராகுல் title=

மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

அடுத்த மாதம் நவம்பர் 28 ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். சட்டசபை தேர்தலை அடுத்து ராகுல்காந்தி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் மற்றும் சம்பல் பகுதிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று ஷியாபூரின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியது, 

இங்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் குழந்தைகள் இறந்து போகிறார்கள். இது பற்றி பிஜேபி அரசாங்கத்துக்கு எந்தவித கவலையும் இல்லை. ஆனால் தங்களை பற்றி மார்க்கெட்டிங் (பிரச்சாரம்) செய்கிறார்கள். எங்கு பார்த்தலும் முதலமைச்சரின் (சிவராஜ் சிங் சவுகான்) விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் நிரம்பி உள்ளனர். 

இது தேர்தலுக்கான நேரம். இந்த நேரத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் எதிர்கொள்ளும் இரண்டு மூன்று முக்கிய பிரச்சினையும் இருக்கிறது. அது பசி, ஊட்டச்சத்து குறைபாடு, விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனை. 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 15 வருடமாக பாஜக ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்த 15 வருட ஆட்சியின் மூலம் தெரிந்து விட்டது விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு எந்தவித வேலை வாய்ப்பையும் பாஜக அரசு அளிக்காது. 

பாஜகபோல உங்கள் கணக்கில் 15 லட்சம் ரூபாய்களை போடுவோம் என தவறான வாக்குறுதிகளை நாங்கள் செய்ய மாட்டோம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

கடந்த 15 ஆண்டுகளாக அவர்களுக்கு (பா.ஜ.க) வாய்ப்பு கொடுத்தீர்கள். எந்தவித பயனும் இல்லை. இந்தமுறை எங்களுக்கு (காங்கிரஸ்) ஒரு வாய்ப்பு கொடுங்கள். காங்கிரஸ் கட்சி மக்களுடன் இணைந்து செயல்படும். 24 மணிநேரத்தில் 18 மணி நேரம் மக்களுக்காக காங்கிரஸ் கட்சியின் முதலைமைச்சர் பணியாற்றுவார். மத்தியப் பிரதேசத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

Trending News