தமிழகத்தை சேர்ந்த 21 பேர் உள்ளிட்ட 855 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது!
குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய 855 காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவத்தினருக்கு ஜனாதிபதி காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் காஷ்மீர் வன்முறை சம்பவங்கள், நக்சல் பாதிப்பு பகுதிகள் உள்ளிட்டவைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களும் அடங்குவர்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கவுள்ளார்.
அதன்படி தமிழகத்தை சேர்ந்த 21 அதிகாரிகள், மேகாலயா 13, உ.பி., 10, எல்லை பாதுகாப்பு படையினர் 8, டில்லி 4, ஜார்கண்ட் 3, அசாம் அதிரடிப்படை மற்றும் இந்தோ - திபெத்திய எல்லை காவல்துறையினர் தலா ஒருவருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 21 அதிகாரிகளின் பெயர்...
- ராதிகா, எஸ்.பி., லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை
- லலிதா லஷ்மி, எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை
- மல்லிகா, துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை
- சாமுண்டீஸ்வரி, எஸ்.பி., தமிழ்நாடு போலீஸ் அகாடமி, சென்னை
- லஷ்மி, துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, கோயம்புத்தூர்
- இளங்கோ, கூடுதல் கண்காணிப்பாளர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை
- மோகன்ராஜ், கூடுதல் கண்காணிப்பாளர், காவலர் பயிற்சி பள்ளி, ஆவடி, சென்னை
- ராஜேந்திரன், கூடுதல் கண்காணிப்பாளர், சிஐடி சிறப்பு பிரிவு, தலைமையகம், சென்னை
- செல்வன், துணை ஆணையர், தி.நகர், சென்னை
- சுப்புராயன், துணை ஆணையர், தரமணி, சென்னை
- ஹெக்டர் தர்மராஜ், துணை கண்காணிப்பாளர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, நாகர்கோவில்
- ராமச்சந்திர மூர்த்தி, இன்ஸ்பெக்டர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை
- அருள்ராசு ஜஸ்டின், இன்ஸ்பெக்டர், சிஐடி சிறப்பு பிரிவு, சென்னை
- குமாரவேலு, இன்ஸ்பெக்டர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை
- பாஸ்கரன், இன்ஸ்பெக்டர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை
- மோகன் குமார், எஸ்.ஐ., சென்னை
- வேணுகுமாரன், சிறப்பு எஸ்.ஐ., கணினிவழி குற்றப்பிரிவு, சென்னை
- செல்வராஜூ, சிறப்பு எஸ்.ஐ., லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, கோயம்புத்தூர்
- ரவி, சிறப்பு எஸ்.ஐ., நீலகிரி மாவட்டம்
- மதிவேந்தன், சிறப்பு எஸ்.ஐ., லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை
- வேங்கட சரவணன், தலைமை காவலர், ஜே8 நீலாங்கரை, சென்னை