JEE-Main postponed: பொறியியல் படிப்புகளுக்காக முக்கியமான நுழைவுத் தேர்வாக ஜே.இ.இ மெயின் தேர்வுகள் கருதப்படுவதால், மூன்று மற்றும் நான்காம் கட்ட தேர்வுகளுக்கு இடையே குறைந்தது 4 வார இடைவெளி வழங்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை அடுத்து, நான்காம் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
அதாவது பொறியியல் கல்லூரிகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த மூன்றாம் கட்டத்தேர்வு மே மாதம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் மே மாதமும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
நாட்டில் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வந்ததால், ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 வரையும், நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து தேர்வுகள் வைப்பதால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி மூன்றாம் கட்ட தேர்விற்கும், நான்காம் கட்ட தேர்விற்கும் இடையே குறைந்தது நான்கு வாரங்கள் இடைவெளி தேவை எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
ALSO READ | JEE Main தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு: தேசிய தேர்வு முகமை
இந்தக் கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு, "மூன்று மற்றும் நான்காம் கட்ட தேர்வுகளுக்கு இடையே 4 வார இடைவெளி அளிக்கப்பட்டுகிறது, இதன் காரணமாக நான்காவது கட்டத் தேர்வு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்வீட்:
"மாணவர் சமூகத்தின் தொடர்ச்சியான கோரிக்கையை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தங்கள் செயல்திறனை அதிகரிக்கவும், தேர்வுக்கு தயாராகவும் ஜே.இ.இ (முதன்மை) 2021 தேர்வின் மூன்று மற்றும் நான்காம் கட்டத் தேர்வுகள் இடையே நான்கு வார இடைவெளியை வழங்க தேசிய தேர்வு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Registrations for the JEE(Main) session 4 is still in progress and dates for registration will be further extended upto 20th July, 2021. @EduMinOfIndia @PMOIndia @AICTE_INDIA
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 15, 2021
"அதன்படி, ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26, 27 மற்றும் 31, மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும். மொத்தம் 7.32 லட்சம் மாணவர்கள் ஏற்கனவே தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்" என ட்வீட் செய்துள்ளார்.
ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தேர்வு விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக ஜூலை 20 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ALSO READ | JEE Main 2021 தேர்வின் Answer Key வெளியிடப்பட்டது - எப்படி எங்கு சரிபார்ப்பது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR