ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை பாஜக எம்.பி. மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் தருண்விஜய் ஆதரித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பத்திரிக்கையாளரிடம் பேசிய தருண் விஜய், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பற்றி புரிந்துக்கொள்ளாமல் பீட்டா அமைப்பு ஜல்லிகட்டுக்கு எதிராக கருத்து கூறிவருகிறது. மேலும் பீட்டா அமைப்பை தடை விதிக்க பார்லிமென்டில் குரல் கொடுப்பேன் என்று தனது ஆதரவை கூறியுள்ளார்.
ஒருபுறம் ஜல்லிக்கட்டு மாட்டை துன்பம் படுத்துவதாக கூறும் பீட்டா அமைப்பு 1000-க் கணக்கான மிருங்கங்களை கொள்வதை பற்றி எந்த நடவடிக்கை எடுத்ததில்லை என்று தருண் விஜய் கூறியுள்ளார். இந்த பீட்டா அமைப்பு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காயம் படுத்துகிறது என்றார்.