திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அங்கபிரதக்ஷணம் செய்ய இனி ஆன்-லைனில் டோக்கன் வழங்கப்படும் என்றும், இது ஜூன் 15 முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது. மேலும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான (16-06-2022 முதல் 31-072022 வரை) அங்கபிரதக்ஷணத்தின் ஆன்-லைன் ஒதுக்கீடு, ஜூன் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு TTD ஆன்-லைன் போர்ட்டலில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 750 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | திருப்பதியில் முதியோருக்கு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி!
திருப்பதி ஏழுமலையானை சந்திக்க உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கடும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைனில் புக் செய்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. இருப்பினும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கூட்டம் பல மடங்கு அதிகமாக உள்ளது. தரிசன டிக்கெட்களை புக் செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டாலும் கூட்டம் குறைந்த பாடில்லை. கடந்த வாரம் ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் இனி அங்கப்பிரதக்ஷனம் செய்வதற்கும் ஆன்லைனில் டோக்கன் முறையை தற்போது திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர். சமீபத்தில் நயன்தாரா திருப்பதி கோவிலில் செருப்பு அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 300 ரூபாய் டிக்கெட் 3,000 ரூபாய்; பதறிய திருப்பதி தேவஸ்தானம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR