காஷ்மீர் ஆளுநரின் அழைப்பை ஏற்று காஷ்மீர் வருவதாக அறிவித்திருந்த ராகுல் காந்தி, தான் காஷ்மீருக்கு எப்போது வரவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்!
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த10-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் பதிலளித்தார்.
ராகுல் காந்தி கருத்திற்கு சத்ய பால் மாலித் தெரிவிக்கையில், 'ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வந்து பார்வையிடுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு சொந்தமான விமானத்தை டெல்லிக்கு அனுப்புகிறோம். அதில் பயணித்து காஷ்மீருக்கு வாருங்கள். இங்கு நிலைமை மிகவும் சீராகத்தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வீர்கள்’ என கூறியிருந்தார்.
Dear Governor Malik,
A delegation of opposition leaders & I will take you up on your gracious invitation to visit J&K and Ladakh.
We won’t need an aircraft but please ensure us the freedom to travel & meet the people, mainstream leaders and our soldiers stationed over there. https://t.co/9VjQUmgu8u
— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2019
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் பதிவிட்ட ராகுல் காந்தி., "நீங்கள் எங்களுக்கு விமானம் அனுப்ப வேண்டியதில்லை. ஆனால், அங்கு சுதந்திரமாக பயணம் செய்து மக்களையும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் நமது ராணுவ வீரர்களையும் நாங்கள் சந்திப்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் போதும்" என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, 'அன்பிற்குரிய மாலிக் அவர்களே, என் ட்விட்டிற்கு உங்கள் பலவீனமான பதிலை கண்டேன்.
Dear Maalik ji,
I saw your feeble reply to my tweet.
I accept your invitation to visit Jammu & Kashmir and meet the people, with no conditions attached.
When can I come?
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2019
எவ்வித கட்டுப்பாடும் இன்றி, நான் காஷ்மீர் வந்து, அங்குள்ள மக்களை சந்திக்கிறேன் என கூறி விட்டேன். எப்போது நான் வர வேண்டும்? என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்' என கேள்வி எழுப்பியுள்ளார்.