வாரணாசியில் பெட்ரோல் எலுமிச்சை இலவசம் - அலைமோதும் கூட்டம்

தங்கத்தைப் போல் கிடுகிடுவென எலுமிச்சையும், பெட்ரோலும் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகின்றன  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2022, 09:06 PM IST
  • வாரணாசியில் பெட்ரோல், எலுமிச்சை இலவசம்
  • மொபைல் கடைக்காரரின் நூதன விளம்பரம்
  • கடையில் அலைமோதும் கூட்டம்
வாரணாசியில் பெட்ரோல் எலுமிச்சை இலவசம் - அலைமோதும் கூட்டம் title=

நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையேற்றத்தால், மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 ரூபாயைக் கடந்து பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. கார் மற்றும் பைக்குகளை பயன்படுத்திக் கொண்டிருந்த பெரும்பாலானோர் பொதுப்போக்குவரத்தை நாடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வாரணாசியைச் சேர்ந்த ஒருவர் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் எலுமிச்சை பழத்தை இலவசமாக கொடுப்பதால் அவரது கடையில் கூட்டம் அலை மோதுகிறது. 

மேலும் படிக்க | "அயன் சூர்யாவை" மிஞ்சிய புத்திசாளி! வைரலான வீடியோ

வாரணாசியைச் சேர்ந்த மொபைல் கடைக்காரர்  ஒருவர் இந்த ஆஃபரை வழங்கியுள்ளார். கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் வியாபார தந்திரமாக தன்னுடைய கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தவகையான விளம்பரத்தைக் கையில் எடுத்துள்ளார். மொபைலுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்குபவர்களுக்கு எலுமிச்சை பழங்களை இலவசமாக கொடுக்கிறார். அவர்கள் வாங்கும் தொகைக்கு ஏற்ப 2 முதல் 4 பழங்களை வரை இலசமாக கொடுக்கும் அவர், பெட்ரோலையும் இலசமாக கொடுக்கிறார்.

10 ஆயிரம் ரூபாய்க்கு கடையில் வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு வாரணாசி பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற மொபைல் கடைகளில் மொபைல் வாங்க செல்பவர்கள் கூட ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக இந்த கடைக்காரரின் மொபைல் கடைக்கு செல்கின்றனர். இது குறித்து அவர் பேசும்போது, தன்னுடைய இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். கடையில் விற்பனையும் அதிகரித்திருப்பதாக கூறியுள்ள அவர், விலைவாசி ஏற்றத்தை கடைக்கான விளம்பரமாக மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | சபர்மதி ஆசிரமத்தில் நூல் நூற்ற பிரிட்டன் பிரதமர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News