JKLF: காஷ்மீரில் வன்முறையை ஒடுக்கும் மத்திய அரசு! ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை!

Centre Banned JKLF: நயீம் அகமது கான் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 12, 2024, 10:48 PM IST
  • ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை
  • உடனடியாக அமலுக்கு வந்த தடை
  • நயீம் அகமது கான் தலைமையிலான பிரிவுக்கு தடை
JKLF: காஷ்மீரில் வன்முறையை ஒடுக்கும் மத்திய அரசு! ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை! title=

JKLF Ban Latest Update: சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் நயீம் அகமது கான் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தடை விதித்துள்ளது. உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, ஹுரியத் மாநாட்டின் ஒரு அங்கமான JKNF உடனடியாக தடை செய்யப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி "சட்டவிரோத அமைப்பு" என்று மத்திய அரசு அறிவித்தது. காஷ்மீரை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் எடுத்துள்ள அண்மை நடவைக்கை இது.  

கடந்த ஆண்டு அக்டோபரில், உள்துறை அமைச்சகம் ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை (ஜேகேடிஎஃப்பி) ஐந்தாண்டு காலத்திற்கு சட்டவிரோத சங்கமாக அறிவித்தது. டிசம்பரில், MHA 'முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் (மசரத் ஆலம் பிரிவு)' MLJK-M ஐ 'சட்டவிரோத சங்கமாக' அறிவித்தது.

சட்டவிரோத அமைப்பாக JKNF அறிவிக்கப்பட்டதன் பின்னணி 

JKNF "நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது" என்று MHA வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டுவதற்கும், யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளுக்கு தளவாட ஆதரவை வழங்குவதற்கும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆதரிப்பதில் ஜேகேஎன்எஃப் உறுப்பினர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்று மத்திய அரசின் உத்தரவு கூறுகிறது.

மேலும் படிக்க - மீண்டும் வயநாட்டில் ராகுல் காந்தி... 39 வேட்பாளர்கள் ரெடி - காங்கிரஸ் அறிவிப்பு

ஜே.கே.என்.எஃப் உறுப்பினர்கள் "காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்தல், பாதுகாப்புப் படையினர் மீது கல் வீச்சு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக வன்முறை எதிர்ப்பாளர்களைத் திரட்டுவதில் ஈடுபட்டுள்ளனர்" என்றும் இந்த உத்தரவு கூறுகிறது.  

JKNF பின்னணி
JKNLF (The Jammu Kashmir Liberation Front) அமைப்பை உருவாக்கிய இணை நிறுவனர்களில் ஒருவரான அமானுல்லா கான், 1977ஆம் ஆண்டு மே மாதம், ஐக்கிய இராச்சியத்தில் JKLF என்ற அமைப்பை நிறுவினார். அவரது பல கூட்டாளிகள், இந்தியப் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.

இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள மிர்பூர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவு கிடைத்ஹ்டது. 1995 ஆம் ஆண்டு செப்டம்பரில் யாசின் மாலிக் தலைமையிலான JKLF, இரண்டாக பிரிந்தது. தங்கள் நோக்கங்களையும் இலட்சியங்களையும் அடைவதற்கான அணுகுமுறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மாலிக் கான் பிரிந்தார்.

இரு அமைப்புகளுமே ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்ற பொதுவான நோக்கத்தைவைத்திருந்தாலும், யாசின் மாலிக் தலைமையிலான பிரிவினர் இந்த இலக்கை அடைய வன்முறையைப் பயன்படுத்துவதை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கை சின்னத்தில் போட்டியிடப்போகும் காங்கிரஸ் வேட்பாளர்கள்! இரண்டம் கட்ட பட்டியல் வெளியானது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News