புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா பிரபல தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் பேசியிருந்தாலும், கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் வைரலாகின்றன.
6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறும் குலேரியா, மக்கள் முதல் இரண்டு அலைகளில் இருந்தும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை என்கிறார்.
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. முறையாக முகக் கவசம் அணிவதில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம் என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.
Read Also | Corona Third Wave: காற்றுக்கு பிறகு நீரிலும் கொரோனா! மூன்றாம் அலை தண்ணீர் மூலமா?
மூன்றாவது அலையின் பாதிப்பு இப்போதே தொடங்கியிருக்கலாம் என்று அஞ்சுவதாக கூறும் எய்ம்ஸ் மருத்துவமனைத் தலைவர், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது'' என்று தெரிவித்தார்.
கொரோனாவின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் அடிப்படையில் பார்க்கும்போது அடுத்த ஆறு மாதத்துக்குள் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது டாக்டர் குலேரியாவின் கருத்துப்படி கொரோனா மூன்றாம் அலை தாக்கம், இந்தியாவை தாக்குவதற்கு குறைந்த காலத்தையே எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
ALSO READ | DRDO 2-DG மருந்து அனைத்து கொரோனா திரிபுகளிலும் செயலாற்றுகிறது: ஆய்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR