ஐ.என்.எக்ஸ். மீடியா பணமோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்தினை அமலாக்க துறை கைது செய்வதற்கான தடையை மார்ச் 22ந்தேதி வரை டெல்லி உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதியை முறைகேடாக பெற்றுத்தர உதவியதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்., 28-ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
பின்னர் டெல்லி அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். கிட்டத்தட்ட 15 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தியது சிபிஐ. நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வரும் 24-ம் தேதி வரை டெல்லி திகார் சிறையில் கார்த்தி சிதம்பரத்தை அடைக்க உத்தரவிட்டது.
மேலும் கார்த்தி சிதம்பரத்திம் ஜாமின் மனுவின் மீதான விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா பணமோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்தினை அமலாக்க துறை கைது செய்வதற்கான தடையை மார்ச் 22ந்தேதி வரை டெல்லி உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது
விசாரணையை 22ந்தேதி நடத்துவதில் எந்த எதிர்ப்பும் இல்லை என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களை நாங்கள் ஏற்கிறோம் என அமலாக்க துறையின் வழக்கறிஞர் வினோத் திவாகர் கூறினார்.
Delhi High Court allows fresh application of #KartiChidambaram which sought 2 day extension in protection from arrest by ED citing non availability of Senior Counsel on the date.ED filed no objection in it. Next date of hearing is now 22nd March pic.twitter.com/vr26PYILfE
— ANI (@ANI) March 15, 2018
இதுபற்றி நீதிமன்ற அமர்வு கூறும்பொழுது, தேதியை நீட்டிக்க அமலாக்க துறை எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால் மார்ச் 22ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது.