புதுடெல்லி: இந்தியன் ரயில்வே (Indian Railway) நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது மீண்டும் இந்தியன் ரயில்வே அப்படிப்பட்ட ஒரு செயலை செய்துள்ளது. கடத்தப்பட்ட ஒரு சிறுமியைக் காப்பாற்ற மேற்கு ரயில்வே தனது எக்ஸ்பிரஸ் ரயிலை லலித்பூரிலிருந்து போபாலுக்கு, சுமார் 200 கி.மீ. எங்கும் நிறுத்தாமல் செலுத்தியது.
ரயில்வே அமைச்சர் விவரங்களை பகிர்ந்து கொண்டார்
இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goel) அவர்களே ட்வீட் செய்து இந்த விஷயம் குறித்து தெரிவித்தார்.
தந்தை சிறுமியை கடத்தினார்
அப்பாவி குழந்தையை கடத்தியது வேறு யாரும் இல்லை, குழந்தையின் தந்தைதான்!! தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் லலித்பூர் ரயில் நிலையம் அருகே வசிக்கிறார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் மன வேறுபாடு ஏற்பட்டது. மனைவிக்கு பாடம் கற்பிக்க, அந்த நபர் தன் மகளையே கடத்தியதாக கூறப்படுகிறது.
ALSO READ: Watch: Viral ஆனது Mask போட்டு வாக்கிங் போகும் நாயின் video!!
குடும்ப சண்டையால் பரிதாபமான நிலையில் பெண் குழந்தை
தனது சொந்த மகளை கடத்திய அந்த நபர் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். மனைவிக்கு புத்தி புகட்டுவதாக எண்ணிக்கொண்டு அவர் தூக்கத்தில் இருந்த தனது மூன்று வயது மகளை ரகசியமாக அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
போலீஸ் நிர்வாகத்தின் முடிவு
இந்த விவகாரம் வெளிவந்தவுடன் அந்த குழந்தையை தெடும் பணி தீவிரமடைந்தது. சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் அவசரமாக ஒரு திட்டத்தை உருவாக்கினர். மேலும், சரியான நேரத்தில் சிறுமியை விடுவித்தனர். விசாரணையின் ஆரம்ப கட்டத்தில், சி.சி.டி.வி காட்சிகள் (CCTV Footage) தேடப்பட்டபோது, ஒரு சிறுமியுடன் ஒரு ஆணும் ராப்தி சாகர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸில் லலித்பூரிலிருந்து போபாலுக்குச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் நடுவில் இறங்கி தப்பிக்க முடியாத வகையில் ரயிலை இடைவிடாது இயக்குமாறு காவல்துறை ரயில்வேவிடம் கோரியது. ரயில் போபாலை அடைந்தவுடன், சிறுமியை மீட்ட போலீசார் பின்னர் தந்தையை கைது செய்தனர்.
பெண் குழந்தையை காப்பாற்ற ரயில்வே செய்த இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
ALSO READ: வானிலிருந்து பெய்த தங்க மழை, பீதி கலந்த மகிழ்ச்சியில் மக்கள்: நடந்தது என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR