Dornier aircraft இயக்கும் இந்திய கடற்படையின் முதல் மகளிர் விமானிகள்

இந்திய கடற்படையின் Dornier Aircraftக்கான பெண் விமானிகளின் முதல் பிரிவினர், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளையில் (Southern Naval Command (SNC)) பணியில் இணைந்தனர். (எஸ்.என்.சி) செயல்படுத்தியது. ஐ.என்.எஸ் கருடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஸிங் அவுட் விழாவில் ‘முழு செயல்பாட்டு கடல்சார் மறுமதிப்பீடு  (‘Fully operational Maritime Reconnaissance (MR) Pilot ) விமானிகளாக பட்டம் பெற்ற 27 வது டோர்னியர் செயல்பாட்டு பறக்கும் பயிற்சி (Dornier Operational Flying Training (DOFT))  பேட்சின் ஆறு விமானிகளில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 07:11 PM IST
Dornier aircraft இயக்கும் இந்திய கடற்படையின் முதல் மகளிர் விமானிகள்   title=

இந்திய கடற்படையின் Dornier Aircraftக்கான பெண் விமானிகளின் முதல் பிரிவினர், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளையில் (Southern Naval Command (SNC)) பணியில் இணைந்தனர். (எஸ்.என்.சி) செயல்படுத்தியது. ஐ.என்.எஸ் கருடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஸிங் அவுட் விழாவில் ‘முழு செயல்பாட்டு கடல்சார் மறுமதிப்பீடு  (‘Fully operational Maritime Reconnaissance (MR) Pilot ) விமானிகளாக பட்டம் பெற்ற 27 வது டோர்னியர் செயல்பாட்டு பறக்கும் பயிற்சி (Dornier Operational Flying Training (DOFT))  பேட்சின் ஆறு விமானிகளில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

புதுடெல்லியைச் சேர்ந்த லெப்டினன்ட் திவ்யா ஷர்மா, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப், பீகாரைச் சேர்ந்த சிவாங்கி ஆகியோர் முதல் தொகுப்பின் மூன்று பெண் விமானிகள்.  பெண் விமானிகள் மூவரும், ஆரம்பத்தில் அடிப்படை விமானப் பயிற்சியை இந்திய விமானப்படை மற்றும் கடற்படையில் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு DOFT படிப்பையும் முடித்தனர். இந்த மூன்று பெண் விமானிகளில், Lt Shivangi 2019 டிசம்பர் 02ஆம் தேதியன்று கடற்படை விமானியாக தகுதி பெற்றார்.

ஒரு மாத தரை பயிற்சி கட்டத்தை உள்ளடக்கிய அவர்களின் பாடத் திட்டம், எஸ்.என்.சியின் பல்வேறு தொழில்முறை பள்ளிகளில் நடத்தப்பட்டது மற்றும் ஐ.என்.ஏ.எஸ் 550 இன் எஸ்.என்.சியின் டோர்னியர் படைப்பிரிவில் எட்டு மாத பறக்கும் பயிற்சியையும் இந்த விமானிகள் பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக எஸ்.என்.சியின் தலைமை பணியாளர் அதிகாரி (பயிற்சி) ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ், க்லந்துக் கொண்டார். டோர்னியர் விமானத்தில்  அனைத்து செயல்பாட்டு பணிகளையும் செய்ய முழு தகுதி பெற்ற விமானிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News