NEET 2024 Admit Card | இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

Neet Hall Ticket Download: மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Written by - Shiva Murugesan | Last Updated : May 2, 2024, 02:34 PM IST
NEET 2024 Admit Card | இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு title=

NEET 2024 Admit Card Out: தேசிய தேர்வு முகமை (NTA) இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு 2024 ஹால் டிக்கெட்டை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in மற்றும் neet.ntaonline.in இல் வெளியிட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு மே 5 ஆம் தேதி இந்தியாவில் உள்ள 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வுகளை ஒரே ஷிப்டில் நடத்தும். இது பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5:20 மணிக்கு முடிவடையும், 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்படும்.

நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்குவதற்கான இணையதளங்கள்

- exams.nta.ac.in
- neet.ntaonline.in

நீட் நுழைவுத் தேர்வு 2024 ஹால் டிக்கெட்டில் என்னென்ன விவரங்கள் இருக்கும்

நீட் நுழைவுத் தேர்வு அட்மிட் கார்டில் மாணவரின் பெயர், ரோல் எண், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு நகரம் மற்றும் மையம், அத்துடன் அந்தந்த குறியீடுகளுடன் பாடங்கள் இருக்கும்.

நீட் நுழைவுத் தேர்வு 2024 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5 அன்று இந்தியாவில் உள்ள 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு நடத்தப்பட உள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு 2024 எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை 10 லட்சம் மாணவர்களும், 13 லட்சத்துக்கும் மாணவிகளும் என 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். அதாவது மொத்தம் 23,81,833 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க - உயிரே போனாலும் நீட்டை ரத்து பண்ண முடியாது - அண்ணாமலை!

நீட் நுழைவுத் தேர்வு 2024 எந்த படிப்புகளுக்கு நடத்தப்படுகிறது? 

மே 5 அன்று நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவம், 318 பல் மருத்துவம், 914 ஆயுஷ் மருத்துவம், 47  BVSc மற்றும் AH படிப்புகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் நுழைவுத் தேர்வு 2024 எத்தனை மொழிகளில் நடத்தப்படுகிறது?

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, கன்னடம், பஞ்சாபி, உருது, மலையாளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும்.

நீட் நுழைவுத் தேர்வு 2024 எப்பொழுது நடைபெறும்?

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும்.

நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்குவதற்கு தேர்வையான ஆவணங்கள் என்ன?

1) விண்ணப்ப எண்
2) பிறந்த தேதி

மேலும் படிக்க - இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு - உதயநிதி ஸ்டாலின்!

நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிடுவது யார்? 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை, தேசிய தேர்வு முகமை (National Testing Agency ) வெளியிடுகிறது.

நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி? 

படி 1: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளம் - neet.ntaonline.in அல்லது exams.nta.ac.in/NEET செலவும்

படி 2: அடுத்து, சமீபத்திய செய்திப் பிரிவின் கீழ் முகப்புப் பக்கத்தில், 'NEET UG 2024 அட்மிட் கார்டு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: மாணவர்கள் உள்நுழைவு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

படி 4: விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் போன்ற தேவையான சான்றுகளை உள்ளிடவும்.

படி 5: 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 6: NEET UG 2024 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.

படி 7: பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க - நீட் தேர்வுன்னாலே பிரச்சனையா? முதுகலை பல் மருத்துவ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News