Madhya Pradesh Horrifying Incident: மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் தற்செயலாக பிற சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தனது கிரீஸ் கையால் தொட்டதற்காக, அவர் தனது முகத்திலும் உடலிலும் மனித மலத்தை பூசிவிட்டதாக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரின் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. சத்தர்பூர் சம்பவம் தொடர்பாக ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ராம்கிரிபால் படேல் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தஷ்ரத் அஹிர்வார் என்பவர் நேற்று இதுகுறித்து மகராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சத்தர்பூர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 35 கி.மீ, தொலைவில் உள்ள பிகௌரா என்ற கிராமத்தில் பஞ்சாயத்துக்கான வடிகால் கட்டும் பணியில் தஷ்ரத் நேற்று முன்தினம் (ஜூலை 21) ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
இது குறித்து மகராஜ்பூர் காவல் நிலையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய தஷ்ரத், குற்றஞ்சாட்டப்பட்ட ராம்கிரிபால் படேல் அருகில் உள்ள குழாயடியில் குளித்துக் கொண்டிருந்தார் எனவும் கட்டுமானப் பணியில் பயன்படுத்திய கிரீஸ் கையால் தவறுதலாக ராம்கிரிபால் படேலை தொட்டதாக தஷ்ரத் கூறினார்.
"அதன்பிறகு, படேல் குளிப்பதற்குப் பயன்படுத்தும் குவளையில் அருகில் கிடந்த மனித மலத்தை எடுத்து வந்து என் தலை மற்றும் முகம் உட்பட என் உடலில் பூசினார்" என்று அந்த சம்பவத்தை விவரித்தார். படேல் தன்னை ஜாதி ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தஷ்ரத் கூறினார்.
"ஊர் பஞ்சாயத்தில் இந்த பிரச்னையை சொல்லி, கூட்டத்தை கூட்டினேன். அவர்கள் அவரை தண்டிக்காமல், அதற்குப் பதிலாக, அன்று (ஜூலை 21) எனக்கு ரூ.600 அபராதம் விதித்தனர்," என்று தஷ்ரத் குற்றஞ்சாட்டினார். வெள்ளிக்கிழமை ஏன் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்று செய்தியாளர்களால் கேள்வியெழுப்பப்பட்ட நிலையில், தனது வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு புகார் அளிக்க வர இயலவில்லை என்று கூறினார்.
"ராம்கிரிபால் படேல் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் 294 (ஆபாசமான செயல்கள் அல்லது பொது வார்த்தைகளுக்கு தண்டனை) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று காவல்துறை அதிகாரி மன்மோகன் சிங் பாகல் என்பவர் கூறினார்.
தஷ்ரத் மற்றவர்களுடன் பணிபுரியும் போது, அவர்கள் அருகில் குளித்துக் கொண்டிருந்த படேலுடன் கேலி செய்தார்கள் என்று பாகேல் கூறினார். "அகிர்வார் படேலின் கையில் கிரீஸால் தொட்டபோது, அவர்கள் ஒருவரையொருவர் விளையாட்டுத்தனமாக வீசிக் கொண்டிருந்தனர். அதன்பின், படேல் மனித மலத்தை கையால் எடுத்து அஹிர்வாரின் முதுகில் வீசினார்" என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
தஷ்ரத் சனிக்கிழமையன்று ஒரு புகாருடன் காவல்துறையை அணுகினார், பாகேல் கூறினார். பஞ்சாயத்து மீதான தஷ்ரத் சொன்னது குறித்து பாகேலிடம் கேள்வியெழுப்பப்பட்ட நிலையில், தன்னிடம் அதுகுறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் 40 முதல் 45 வயதுடையவர்கள் என போலீஸார் தெரிவித்தனர். சமீபத்தில், மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் படிக்க | நாட்டையே உலுக்கிய மணிப்பூர் சம்பவம்... 19 வயதான ஐந்தாவது குற்றவாளி கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ