தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டிருப்பது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இது எந்த மாநிலத்தின் அண்மைச் செய்தி தெரியுமா?
மத்திய பிரதேசத்தில் தான் இந்த அதிரடி நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் ஒருவர் எடுத்திருக்கிறார். ஜூன் மாதத்துக்கான சம்பளம் வழங்குவதற்கு முன்னதாக, அரசு ஊழியர்களிடம் தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப்பெறுங்கள் என்று மாவட்டத்தின் அனைத்து கருவூல அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா பேரிடரால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் இரண்டாவது அலை, முதல் அலையை விட மிகவும் வீரியமாக தாக்குதலை தொடுத்தது. இப்போது இரண்டாவது அலையை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் டெல்டா திரிபு, டெல்ட்டா பிளஸ் என தனது உருவை மாற்றிக் கொண்டுள்ளது. இதுவரை டெல்டா பிளஸ்ஸால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Also Read | COVID-19: இந்தியாவில் இதுவரை சுமார் 40 டெல்டா பிளஸ் திரிபு வைரஸ் பாதிப்பு
இந்நிலையில் தடுப்பூசி மட்டுமே உயிர் பலியை குறைக்கும் என்பதால், அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக இருக்கின்றன. இதை ஊக்குவிக்கும் வகையில், மத்தியபிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்ட கலெக்டர் அஷீஷ் சிங், தடுப்பூசி போடுவதில் ஓரடி முன்னே சென்றுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அறிவித்துவிட்டார்.
ஜூலை 31-ந் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை சமர்பித்தால் தான், அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும்.
Also Read | தட்டம்மை தடுப்பூசி குழந்தைகளை கொரோனாவிலிருந்து காக்குமா?
எனவே, ஜூன் மாதத்துக்கான சம்பளம் போடும்போதே, தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப்பெறுங்கள் என்று மாவட்டத்தின் கருவூல அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அப்போதுதான் அடுத்த மாத இறுதிக்குள் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு முடித்திருப்பார்கள்.
இந்த உத்தரவு, மாதாந்திர சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு மட்டுமல்ல! அரசின் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என அரசுக்காக பணிபுரிபவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்ற தகவலையும் கேட்டுப் பெற்று சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள் தொடர்பான தரவுகளை ஆராய்ந்தபோது, இறந்தவர்கள் யாரும் தடுப்பூசி போடவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. இதையடுத்து, அரசு ஊழியர்களை தடுப்பூசி போடச் செய்வதற்காக உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
Also Read | COVID-19 தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறதா; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR