அறிமுகமானது JioStar OTT! இனி இந்த விஷயங்கள் இலவசமாக கிடைக்காது!

Jio Star OTT: ரிலையன்ஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாக இணைவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டன. இது குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியானது.

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2024, 07:45 AM IST
    இந்தியாவில் JioStar OTT அறிமுகம்.
    ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
    இனி அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
அறிமுகமானது JioStar OTT! இனி இந்த விஷயங்கள் இலவசமாக கிடைக்காது! title=

JioStar ஓடிடியின் அறிமுகம் இந்தியாவில் ஊடக துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது. Jio Cinema மற்றும் Hotstar ஆகியவற்றை இணைப்பது தொடர்பாக ரிலையன்ஸின் Viacom18 மற்றும் Disney Star நிறுவனங்களும் இடையே ரூ.70,350 கோடி ஒப்பந்தம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இணைப்பிற்கு பிறகு புதிய ஓடிடி எப்படி இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், JioStar பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த மாதமே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த இணைப்பிற்கு பிறகு RIL 16.34 பங்குகளும், Viacom18 46.82 பங்குகளும், டிஸ்னி 36.84 பங்குகளும் கொண்டு இருக்கும். இந்த புதிய நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தலைமை தங்குவார் என்றும், உதய் சங்கர் துணைத் தலைவராக இருப்பார் என்றும், கெவின் வாஸ் மற்றும் கிரண் மணி ஆகியோர் இணை தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | ரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்.. உடனே இந்த வேலையை முடிச்சிருங்க

JioStarல் என்ன சிறப்பு அம்சங்கள்?

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒன்றாக இணைக்கப்படுவதால் ஒரே இடத்தில் 120 தொலைக்காட்சி சேனல்கள், படங்கள், வெப் சீரிஸ், விளையாட்டு தொடர்பான அனைத்து நேரலையும் பார்க்க முடியும். இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய மீடியா குழுமத்தை உருவாக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. நவம்பர் 12ம் தேதி JioStar ஓடிடி பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில் "விரைவில் வரும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த இணைப்பின் மூலம் ஐபிஎல் மற்றும் ஐசிசி போட்டிகளுக்கான ஊடக உரிமைகள் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையும் கிடைக்கும்.

கிரிக்கெட் ஒப்பந்தங்கள் தவிர விம்பிள்டன், ப்ரோ கபடி லீக், மோட்டோஜிபி மற்றும் இங்கிலிஷ் பிரீமியர் லீக் போன்ற தொடரின் உரிமையையும் கைப்பற்ற முடியும். மேலும் இந்த ஐபிஎல், ஐசிசி மற்றும் பிசிசிஐ மூலம் ஏற்கனவே ஒப்பந்தத்தில் உள்ள உரிமை காலம் முடியும் வரை விளம்பர ஒப்பந்தங்களில் மாற்றம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போன்ற பல்வேறு மக்கள் பார்க்கும் ஒளிபரப்பு உரிமையை ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தொலைத்தொடர்பு ஆணையம் ஆரம்பத்தில் ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், ஆகஸ்ட் 28 அன்று இந்த மெகா இணைப்புக்கு ஒப்புதல் அளித்தது. மேலும் Viacom 18 தொலைக்காட்சி சேனல்களின் உரிமங்களை ஸ்டார் இந்தியாவுக்கு மாற்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) ஒப்புதல் அளித்தது.

மேலும் படிக்க | ரயில்வேயின் 'Super App' அனைத்து வசதிகளும் ஒரே செயலியில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News