2026 தேர்தலில் இணையும் அதிமுக - பாஜக? எச். ராஜா சொன்ன பதில்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தந்தார் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் மூத்த பாஜக தலைவர் எச்.ராஜாக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2024, 09:35 AM IST
    தமிழகத்தில் 10,000 போலி ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்று கிண்டல்.
    பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜா பேச்சு.
2026 தேர்தலில் இணையும் அதிமுக - பாஜக? எச். ராஜா சொன்ன பதில்! title=

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தந்தார் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா அவருக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து மலைக் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த எஸ்.ராஜா, மலைக்கோவிலில் கொடி மரத்தை வணங்கி, ஆபத் சகாய விநாயகப் பெருமானை வணங்கி, சண்முகப் பெருமானை வணங்கி, மூலவர் முருகப்பெருமானையும் வணங்கி சாமி தரிசனம் செய்தார் -எச். ராஜா அவருக்கு திருக்கோயில் சார்பில் மலர் & மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மலைக் கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எச். ராஜா பேசுகையில்...

மேலும் படிக்க | மக்களே நம்ம பக்கம்! வயிறு எரியவர்கள் எரியட்டும்.. நாம் சரித்திரம் படைப்போம் “உங்களில் ஒருவன் மு.க. ஸ்டாலின்”

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 10 ஆயிரம் போலி ஆசிரியர்கள் இருக்கின்றனர், 294 பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஆசிரியர்களாக உள்ளனர் இதனை வைஸ் சான்சிலரே கூறுகிறார். ஒரு நபர் 11 கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருக்கிறார். ஆதார் கார்டை டூப்ளிகேட் ஆக செய்து இப்படி ஆசிரியர்களாக வந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் 1500 அரசு பள்ளிகளில் ஒன்றிலிருந்து எட்டு வரை 1-8 வரை வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒத்தை எண்ணில் வருகிறது. பல பள்ளிகள் தமிழகத்தில் மூடும் நிலையில் வந்துள்ளது. ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் ஆசிரியர் இருவர் உள்ளனர். எதுவும் சாத்தியம் இந்த தமிழ்நாட்டில்)நத்திங் இஸ் பாசிபிள் இன் தமிழ்நாடு என்று கிண்டல் அடித்தார் எச். ராஜா.

அரசு பேருந்தில் உட்கார்ந்திருப்பவர்கள் பேருந்துக்கு வெளியே ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அரசு பேருந்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அரசு பேருந்தில் டயர் கழட்டி ஓடிவிடும் என்று அரசு பேருந்து குறித்து கிண்டல் அடித்தார். தமிழக அரசாங்கம் மிக மோசமான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தென்மாநிலங்களில் விவசாய நிலங்கள், கோயில் நிலங்கள், வக்கப் போர்டு போன்றவர்களால் அபகரிக்கப்படுகிறது, கிறிஸ்துவ மக்கள் தற்போது போராடி வருகின்றனர், இவர்களின் 700 வீடுகளில் அபகரித்து முஸ்லிமிடம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், இந்த இந்து விரோத தீய சக்திகளை இந்த இந்து விரோத தீய சக்திகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று இந்துக்களை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றுவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, தமிழகத்தில் 2001 ஆம் ஆண்டு அப்போதைய சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் எனது முதல் கன்னி பேச்சில் விளையாட்டு பல்கலைக்கழகம் எடுத்து வர வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரிடம் கோரிக்கை வைத்து நான் பேசினேன். பொறியியல் கல்லூரிக்கு ஒரு பல்கலைக்கழகம் இருப்பது போல் விளையாட்டு இருக்கும் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று நான் அப்போது சட்டமன்றத்தில் பேசினேன் இதன் விளைவாகத்தான் உள்ளூர் மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டுவர முடியும் என்று தேசிய அளவில் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இயலும் என்று நான் கூறினேன் அதிக பதக்கங்களை வெல்ல முடியும் என்று நான் தெரிவித்தேன். நான் ஒரு உடல் கல்வி பேராசிரியரின் மகன் என்று எச்.ராஜா தெரிவித்தார். 

நடிகர் விஜய் கட்சி குறித்து பேசுகையில் சிந்தனையில் தெளிவு இல்லை, காரணம் என்னவென்று கூறினால், செயல்பாட்டில் தெளிவு இருக்க வேண்டும் ஒரு அரசியல் கட்சிக்கு இதில் அவரது கொள்கையில் வேலுநங்கை நாச்சியார் படம் இருக்கிறது 175 ஆங்கிலேயரை போரிட்டு வென்றவர். மற்றொரு பக்கம் ஈவேரா பெரியார் படம் இருக்கிறது 1944 இல் சேலத்தில் முதல் தி.க மாநாட்டில் தீர்மானம் போடுகிறார்கள் ஆங்கிலேயன் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது, அப்படி வெளியேறினால் லண்டனில் இருந்து ராஜதானியை ஆள வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். தேச துரோகி ஈவேரா ஆகஸ்ட் 15 துக்க தினம் கருப்பு கொடி ஏந்தனும் என்று சொன்ன ஆங்கிலேயர் கூலி ஈவேரா ஒரு படம் ஒரு பக்கம் இருக்க இது முழுவதும் குழப்பத்தின் இருக்கிறது விஜய் கட்சி. மொத்தமாக குழப்பமாக இருக்கிறார்கள்  ஒன்று தேசியவாதியாக இருக்கிறீர்களா? அல்லது பிரிவின வாதியாக இருக்கிறீர்களா என்று கொள்கை முடிவு இருக்க வேண்டும் மொத்தத்தில் அவர் குழப்பத்தில் இருப்பதாக எச்.ராஜா விஜய் கட்சியை சாடினார்.

மேலும் படிக்க | நிலம் வைத்திருப்பவரா? பட்டா மாற்றம் குறித்து தமிழக அரசு முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News