முன்னாள் சமாஜ்வாதி கட்சி தலவைரும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆன அமர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக இன்று சிங்கப்பூரில் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.
திரு, அமர்சிங் அவர்கள் நீண்ட நாளாக நோய்வாய்ப்பட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம், சிறு நீரக் அறுவை சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
2008 ஆம் ஆண்டில், யுபி ஏ கூட்டணி ஆட்சி இருந்த பீது, சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டில், அமர் சிங் அவர்கள், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் சுறுசுறூப்புடன் செயல்படும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவராக அவர் இருந்தார் எனவும் ட்வீட் செய்துள்ளார்.
Amar Singh Ji was an energetic public figure. In the last few decades, he witnessed some of the major political developments from close quarters. He was known for his friendships across many spheres of life. Saddened by his demise. Condolences to his friends & family. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 1, 2020
இன்று காலை அம்ர்சிங் அவர் ஈகை திருநாளுக்கு ட்விட்டரின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர் திலக் அவர்களின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்
“திரு. அமர் சிங் அவர்களின் ஆத்மாவிற்கு கடவுள் அடைக்கலம் கொடுப்பார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா ட்வீட் செய்துள்ளார்.