லைன்மேன் திரைப்படம் மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது. இந்த படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் உதயகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளத்தில் வேலை செய்யும் மக்களை பற்றி இந்த படம் பேசுகிறது. அந்த பகுதியில் சார்லி மின் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவருடன் அவரது மகன் செந்திலும் இருக்கிறார், சார்லியின் மனைவி நீண்ட நாட்களுக்கு முன்பு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து விடுகிறார். சார்லி மகன் செந்தில் ஒரு இளம் விஞ்ஞானியாக இருக்கிறார், அந்த பகுதி மக்களுக்கு தேவையான உபகரணங்களை செய்து கொடுக்கிறார். தெரு விளக்குகள் இரவில் தானாக எறிவதற்கும், காலையில் தானாகவே அனைவதற்கும் ஏற்றார் போல ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார். இதனை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் செல்கிறார். இருப்பினும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
Indha kandupidippu jeikkanum
Watch #Lineman streaming now on namma @ahatamil #ActorCharlie @jeganbalaji @87kumar92 @Saranyaravicha7 @Aditibalan @editoranthony @cammkid @anthonydaasan @GREEN4OFFICIAL @Suriya_N @madras_stories @onlynikil @TheVinodSekhar pic.twitter.com/XvvrszoSR8
— aha Tamil (@ahatamil) November 22, 2024
மேலும் படிக்க | கம்பேக் கொடுத்துள்ள கார்த்திக் நரேன்! நிறங்கள் மூன்று படத்தின் திரை விமர்சனம்!
மறுபுறம் உப்பளம் பகுதியில் உள்ள ஒரு முதலாளி பணத்தை அதிக கந்து வட்டிக்கு கொடுத்து அந்த மக்களை கொடுமைப்படுத்தி வருகிறார், மேலும் தனது உள்ளபத்திற்கு திருட்டு கரண்டையும் எடுத்து பயன்படுத்துகிறார். இருவருக்கும் சார்லி குடும்பத்திற்கும் பகை இருந்து கொண்டே உள்ளது. இறுதியில் செந்திலின் கண்டுபிடிப்பு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அந்த பகுதி மக்களுக்கு என்ன ஆனது என்பதே லைன் மேன் படத்தின் கதை. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். உப்பளம் மற்றும் அந்த பகுதி மக்கள் படும் கஷ்டங்களை காட்சிகள் மூலம் விவரித்துள்ளார் இயக்குனர். அவர்களின் தினசரி வாழ்க்கை முறை போன்றவற்றை அழகாக காட்டியுள்ளனர். இருப்பினும் இன்னும் கொஞ்சம் விவரித்து இருக்கலாம்.
தனது மகனுக்காக சார்லி தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் செந்தில் சென்னைக்கு புறப்பட்டு நேரடியாக முதலமைச்சரை சந்தித்து உதவி கேட்க எண்ணுகிறார். ஆனால் சென்னையில் வேறு சில அசம்பாவிதங்கள் நடப்பதால் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்புகிறார். சென்னையில் நடக்கும் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் நாடகத்தனமாக இருந்தது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சுவாரஸ்யம் இல்லாதது லைன் மேன் படத்தில் உள்ள பிரச்சினை. படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த உலகிற்குள் நம்மால் செல்ல முடியவில்லை. உண்மையை கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ