மாநிலங்களவைத் தேர்தல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 31, 2022, 05:56 PM IST
  • மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும்.
  • பா.ஜனதா சார்பில் 3-வது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல் title=

மாநிலங்களவையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

அதன்படி கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க் கிழமை) கடைசி நாள் ஆகும். 

கர்நாடகத்தில் சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் ஆளும் பா.ஜனதாவுக்கு 2 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. 4-வது இடத்தில் வெற்றி பெற எந்த கட்சியிடமும் போதுமான வாக்குகள் இல்லை. இதனால் அந்த இடத்திற்கு இழுபறி நீடித்து வருகிறது. 

மேலும் படிக்க |  மாநிலங்களவைத் தேர்தல்: Essel குழுமத் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல்

இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் 3-வது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று 3-வது வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டு வருகிறது. 

தற்போது பா.ஜனதா கட்சியில் சபாநாயகரையும் சேர்த்து 120 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட என்.மகேஷ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.வான நாகேஷ் ஆகிய 2 பேரின் ஆதரவும் பா.ஜனதாவுக்கு உள்ளது.  மாநிலங்களவையில் ஒரு வேட்பாளர் வெற்றிபெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகள் தேவையாகும். 

தற்போது பா.ஜனதா சார்பில் 2 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், 90 எம்.எல்.ஏ.க்கள் போக மீதி 32 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா சார்பில் 3-வது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அவர் வெற்றிபெற 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 

அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேரின் ஆதரவை பெற பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. நிர்மலா சீதாராமன் போட்டி இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் 2 இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி மேலிடம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அக்கட்சி சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன் 2-வது முறையாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார். நடிகர் ஜக்கேஷ் முதல் முறையாக எம்.பி. ஆக உள்ளார். அவர் இதற்கு முன்பு கர்நாடக மேல்-சபை உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் இந்த முறை கர்நாடகத்தில் இருந்து போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் தற்போது பொய்யாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News