நடனம் ஆடுவதற்கு வயதோ, உடல் பருமனோ ஒரு பொருட்டல்ல என்பதை நிருபிக்கும் வகையில், அற்புதமான நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோவுக்கு காரணமானவர் மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபாலில் வசிக்கும் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா ஆவார்.
46 வயதான இவர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நடனம் என்றால் உயிர். தனது குடும்ப நிகழ்சி, மற்ற நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்ச்சியிலும் இவர் நடனம் ஆடிவது வழக்கம். இவர் பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மிகப் பெரிய ரசிகர். இவர் கோவிந்தா போலவே இசைக்கு தகுந்த மாதிரி அசைந்து ஆடுகிறார்.
Dancing Uncle has been unleashed. India's got talent. pic.twitter.com/kco5cwTLJs
— Gautam Trivedi (@KaptanHindustan) June 2, 2018
கடந்த மே மாதம் 12 ஆம் தேதி தனது மனைவியின் உடன்பிறந்த தம்பியின் திருமணத்திற்கு குவாலியர் சென்றிருந்தார். அங்கு அவர் நடிகர் கோவிந்தாவின் பாணியில் நடனமாடியது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ பார்த்த மத்திய பிரதேசதத்தின் முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பாராட்டி உள்ளார்.
மேலும் இதைக்குறித்து சஞ்சீவிடம் கேட்டபோது, எனது நடனம் வைரலாகி வருகிறது என்பது எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது. இது என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. 1982 ஆம் ஆண்டு முதல் நான் டான்ஸ் ஆடி வருகின்றேன். என் டான்ஸ்க்கு காரணம் கோவிந்தா ஜீ" எனக் கூறினார்
#WATCH Vidisha(Madhya Pradesh): Hear from dancing sensation Professor Sanjeev Srivastava on his jig going viral on social media pic.twitter.com/5Yi8yp2uLS
— ANI (@ANI) June 1, 2018