வாகனங்கள் வைத்திருக்கும் அனைவருக்குமே, ஓட்டுனர் உரிமம் என்னும் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒரு ஆவணம். ஓட்டுநர் உரிமத்தை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 2024 ஜனவரி 31 முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் காலாவதியான லேர்னஸ் லைசன்ஸ் என்னும் கற்றல் உரிமம், டிரைவிங் லைசன்ஸ் என்னும் ஓட்டுநர் உரிமம், கண்டக்டர் லைசென்ஸ் என்னும் நடத்துனர் உரிமம், போன்றவை செல்லுபடி ஆகும் காலத்தை பிப்ரவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து, சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாரதி ஹோட்டலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாரதி போர்டலில், 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல், 2024 பிப்ரவரி 12ஆம் தேதி வரை, சிக்கல்கள் காணப்பட்டன. இதனால் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்க முயன்றவர்கள், உரிமம் தொடர்பான சேவைகளை பெறுவதில், பெருத்த இடையூறுகளை எதிர்கொண்டனர்.
விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு, 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல் 24 பிப்ரவரி 15ஆம் தேதி வரை காலாவதியான, கற்றல் உரிமம், ஓட்டுனர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் வரும் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை செல்லுபடி ஆகும் என்றும், மேலும் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதற்கான அபராத கட்டணம் ஏதும் விதிக்கப்படாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - Arvind Kejriwal: என்னை பயங்கரவாதி போல் பாஜக நடத்துகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க வசதிகள் இருப்பதோடு, ஓட்டுனர் உரிமத்தை ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்து கொள்ளவும், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தின், நகலை எடுத்துக் கொள்ளவும் முடியும். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, அருகில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று, அடையாளச் சான்றுகள், வசிப்பிடச் சான்றுகள், குடியுரிமைச் சான்றுகள் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க - தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? உச்சநீமன்றம் ரத்து செய்தது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ