Maha Kumbhmela 2025: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் (முன்னர் அலகாபாத்) நடைபெற உள்ள மகா கும்பமேளா 2025 விழா ஜன.13ஆம் தேதியான இன்று தொடங்கியது. பிப். 26ஆம் தேதி வரை அதாவது அடுத்த 45 நாள்களுக்கு இந்த மகா கும்பமேளா விழா நடைபெறுகிறது.
கங்கா, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணைவதாக கூறப்படும் திரிவேணி சங்கமத்தில் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவையொட்டி பிரயாக்ராஜ் நகருக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். அதாவது உலகிலேயே அதிகமானோர் கூடும் ஓர் ஆன்மீக விழா இதுதான் என கூறப்படுகிறது.
மகா கும்பமேளா: 40 கோடி பேர் கூடுவார்கள்
144 வருடங்களில் முதல் முறை அரிய நிகழ்வாக இந்த மகா கும்பமேளா நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த விழாவுக்காக சுமார் ரூ.7 ஆயிரம் கோடியை தனது பட்ஜெட்டில் இருந்து உத்தர பிரதேச மாநில அரசு ஒதுக்கி உள்ளது. இந்த விழாவில் சுமார் 40 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இது அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை சேர்த்தால் கூட 40 கோடி வராது என்கிறார்கள். அந்த வகையில், மகா கும்பமேளா விழாவால் உத்தர பிரதேசத்தின் கஜானாவில் எவ்வளவு தொகை சேரும் என்ற கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | மகா கும்பமேளா வரலாறு, முக்கியத்துவம், முக்கிய தேதிகள்..!
மகா கும்பமேளா: ரூ. 2 லட்சம் கோடி வரும்
2025ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் பொருளாதாரத்தில் சுமார் ரூ.2 லட்சம் கோடி வரை பங்களிக்கும் என பொருளாதார அறிஞர்கள் கணிக்கின்றனர். அதாவது இங்கு வருகை தரும் பக்தர் ஒருவர் சராசரியாக ரூ.5000 வரை செலவழிக்கிறார் என்றால் 45 நாள்களில் சுமார் ரூ.2 லட்சம் கோடி வரை வசூல் ஆகும் என கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் அர்த்த கும்பமேளா நிகழ்வின்போது மாநில பொருளாதாரத்தில் அந்த விழா சுமார் ரூ.1.2 லட்சம் கோடி வரை பங்களித்ததாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். தற்போது அதைவிட மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் குவிய இருப்பதால் இந்த தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 2 லட்சம் கோடி வருமானம் வரும்... எப்படி?
மகா கும்பமேளா விழாவால் பல்வேறு துறைகள் பயன் அடைய உள்ளது குறித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்களை இங்கு காணலாம்.
- தண்ணீர், பேக்கேஜிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், பிஸ்கட், ஜூஸ் மற்றும் பிற உணவுப் பொருட்களில் இருந்து மட்டும் சுமார் ரூ.20,000 கோடி வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆயுர்வேத பொருட்கள், தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள் ஆகியவற்றின் வணிகம் ரூ.3,000 கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- எண்ணெய், விளக்குகள், பிரசாதம், கங்கை நீர், பக்தர்களுக்கான உடைகள், சிலைகள், ஆன்மீக புத்தகங்கள் போன்ற பிற பொருட்களின் வணிகமும் சுமார் ரூ.20,000 கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் மொபைல் சார்ஜிங் நிலையங்கள் போன்ற துறைகள் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு சேவைகள், போக்குவரத்து மற்றும் தளவாடத் துறை மட்டும் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுற்றுலா வழிகாட்டிகள், தங்குமிடம் போன்ற சுற்றுலா சேவைகளும் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பொழுதுபோக்கு மற்றும் விளம்பர நடவடிக்கைகள் சார்ந்த வணிகம் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ