2010 கார் ரேஸில் அஜித் எப்படியிருக்காரு பாருங்க! வைரல் போட்டோஸ்..

Ajith Kumar 2010 Car Race Photo : நடிகர் அஜித் குமார், சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் 3ஆம் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், அவர் 2010ல் கார் ரேஸின் போது எடுத்துக்கொண்ட போட்டோவும் வைரலாகி வருகிறது. 

Ajith Kumar 2010 Car Race Photo : கடந்த 2 நாட்களாக, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரே பெயர், அஜித் குமார். நடிப்பதை தவிர தனக்கு பிடித்த பிற வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர், சமீபத்தில் துபாயில் நடைப்பெற்ற 24H கார் ரேஸில் கலந்து கொண்டார். இதில் இவரது குழு 3வது இடத்தைபெற்றிருக்கிறது. இந்த நிலையில், அவர் 2010ஆம் ஆண்டிலும் கார் ரேஸில் கலந்து கொண்டபோது எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /7

நடிகர் அஜித் குமார், சமீபத்தில் துபாயில் நடைப்பெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவரது கார் பிரேக் கோளாறு காரணமாக நிறைய விபத்துகளை சந்தித்தது. இதனால், தான் இந்த ரேஸில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்தார்.

2 /7

அஜித்தின் குழு, 922 பிரிவில் கார் ரேஸில் கலந்து கொண்டது. இதில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் இந்த அணி, 3ஆம் இடத்தை பெற்றது. 

3 /7

அனைவரும் முதல் பரிசு பெற்ற அணியை கொண்டாடினார்களோ இல்லையோ, அஜித்தின் வெற்றியை தங்கள் வெற்றி போல பலர் கொண்டாடினர். 

4 /7

நடிகர்கள் மாதவன், சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அஜித்தை நினைத்து பெருமை படுவதாக தெரிவித்தனர். அதே போல, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அஜித்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். 

5 /7

அஜித், சினிமாவை தாண்டி கார் மற்றும் பைக் மீது ஆர்வம் கொண்டுள்ளவர் என்பது இப்போது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் பழைய ரேஸிங் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

6 /7

அஜித், 2010ஆம் ஆண்டில் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார்.

7 /7

அந்த சமயத்தில் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படமும், இப்போது கார் ரேஸில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 15 வருடத்தில் அஜித்தின் தோற்றம் மாறியிருந்தாலும், அவருக்கு பிடித்த விஷயங்கள் மாறாமல் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.