Avaniyapuram Jallikattu 2025: ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தை சுற்றி உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது வாடிக்கை ஆகும்.
தை திருநாளான நாளை (ஜன. 14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு ஜன.15ஆம் தேதியும், பெரும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மொத்த காளைகள், மாடுபிடி வீரர்கள்
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகளுக்கும், 900 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களில் சான்றிதழ் குளறுபடிகள் காரணமாக பதிவு செய்தும் சில நபர்களுக்கு அனுமதி சீட்டுகள் கிடைக்கப்படவில்லை.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, 2026 காளை உரிமையாளர்களும், 1735 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்த பின்பாக அமைச்சர் மூர்த்தி இன்று ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க | Pongal 2025: தை திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது? - ஜோதிடர்கள் கணிப்பு
மீதம் உள்ள காளைகள்...
12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் 3000க்கும் மேற்பட்ட காளைகள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடிய சூழலில், வாய்ப்பு கிடைக்காத காளைகளுக்கு மதுரை மாவட்டம் கீழக்கரை கலைஞர் ஏறுதழுவுதல் மையத்தில் நடைபெறும் போட்டிகளின் போது வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கலைஞர் ஏறுதழுவுதல் மையத்தில் தொடர்ந்து கட்டணம் செலுத்தி போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலாம் மற்றும் 2ஆம் பரிசுகள்
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் சிறப்பாக விளையாடக்கூடிய மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,"இதுகுறித்து துணை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்வேன்" என்றார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடக்கூடிய காளைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் டிராக்டர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு EVM Nissan Magnite காரும் பரிசு வழங்கப்பட உள்ளது" என கூறினார். தங்க நாணயம், பைக், சைக்கிள், கட்டில், பீரோ போன்ற வீட்டு உபயோக பொருள்களும் பரிசுகளாக வழங்கப்படும். காலை உறுதிமொழியுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் முறையாக 900 வீரர்கள்
டிராக்டரின் மதிப்பு ரூ.10 லட்சம் என்றும், EVM Nissan Magnite காரின் மதிப்பு ரூ.7.49 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும். ஒரு சுற்றில் 100 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். மேலும், வழக்கமாக அவனியாபுரத்தில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் சூழலில், இந்த முறை 900 வீரர்கள் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
காலை 7 மணி முதல் 5 மணிவரை நடைபெறும் என கூறப்படுகிறது. காளைகள் தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக திருப்பரங்குன்றம் சாலை தொடங்கி அவனியாபுரம் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | TN Rain Alert: 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த பகுதிகள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ