7th Pay Commission: இன்னும் சில நாட்களில் அகவிலைப்படி அதிகரிப்பு மட்டுமல்லாமல், அகவிலைப்படி, ஊதியக்குழு, ஊதிய கட்டமைப்பு ஆகியவை தொடர்பான பல செய்திகள் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கக்கூடும்.
7th Pay Commission: ஊதியக் கமிஷனுக்கு பதிலான ஊதிய கணக்கீட்டிற்கான புதிய முறை கொண்டுவரப்படும் என கூறப்படுகின்றது. தனியார் துரை நிறுவனங்களை போல, செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வு (Performance Based Pay System) அளிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பணியாளர்கள் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு பெறுவார்கள். இது அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும். சம்பள உயர்வு செயல்முறை மிகவும் வெளிப்படையானதாகவும், நவீனமயமாகவும் இருக்கும். இதன் மூலம் ஊழியர்களுக்கு நிலையான மற்றும் உறுதியான சம்பள உயர்வு கிடைக்கும்.
வரும் நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அகவிலைப்படி அதிகரிப்பு மட்டுமல்லாமல், அகவிலைப்படி, ஊதியக்குழு, ஊதிய கட்டமைப்பு ஆகியவை தொடர்பான பல செய்திகள் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கக்கூடும்.
7வது ஊதியக் குழுவின் கீழ் தீபாவளிக்கு சற்று முன்பு, அக்டோபர் 16, 2024 அன்று, மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வை அங்கீகரித்தது. இதுவே கடைசியாக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஆகும். இது ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு. இதன் விளைவாக, அகவிலைப்படி 50% இலிருந்து 53% ஆக உயர்ந்தது.
அகவிலைப்படி உயர்வுக்கான சதவீதம், 12 மாத காலப்பகுதியில் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிபப்டையில் கணக்கிடப்படுகின்றது. வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், அதாவது ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படு உயர்த்தப்படுகின்றது.
ஜனவரி 2024 -க்கான டிஏ உயர்வு ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வாரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும். இதுவரை நவம்பர் வரையிலான எண்கள் வந்துள்ளன. பிப்ரவரி 2025 இல், டிசம்பர் தரவு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு டிஏ உயர்வு தீர்மானிக்கப்படும். சமீபத்திய போக்குகளின் படி ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) அகியவை 3% அதிகரித்து மொத்த டிஏ மற்றும் டிஆர் 56% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வழக்கத்தை போலவே, ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் ஹோலி பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், ஜனவரி முதலான டிஏ அரியர் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
ஊதிய உயர்வு: மத்திய அரசு ஜனவரி 2025 க்கான அகவிலைப்படியை 3% அதிகரித்தால் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? 53% அகவிலைப்படியில் மாத அகவிலைப்படி=ரூ.18,000 x 53% = ரூ.9,540. 56% அகவிலைப்படியில் மாத அகவிலைப்படி=ரூ.18,000 x 56% = ரூ.10,080. இந்த வகையில் மாத அகைலைப்படியில் ரூ.540 அதிகரிக்கும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.6,480 ஆக இருக்கும்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக அள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% அதிகரித்தால், இவற்றில் முறையே ரூ.270 மற்றும் ரூ.3,750 ஆக இருக்கும்.
இந்த ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரிய வகையில் உதவும்.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மாற்றங்களுக்கான பரிந்துரைகளை வழங்கும் 8வது ஊதியக் குழுவை ஊழியர் சங்கங்கள் அரசாங்கத்தின் மீது அதிக அழுத்தம் கொடுத்து வருகின்றன. இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில், 8வது சம்பள ஆணையத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று நிதி அமைச்சகம் அறிவித்தது.
ஊதியக் கமிஷனுக்கு பதிலான ஊதிய கணக்கீட்டிற்கான புதிய முறை கொண்டுவரப்படும் என கூறப்படுகின்றது. தனியார் துரை நிறுவனங்களை போல, செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வு (Performance Based Pay System) அளிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பணியாளர்கள் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு பெறுவார்கள். இது அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும். சம்பள உயர்வு செயல்முறை மிகவும் வெளிப்படையானதாகவும், நவீனமயமாகவும் இருக்கும். இதன் மூலம் ஊழியர்களுக்கு நிலையான மற்றும் உறுதியான சம்பள உயர்வு கிடைக்கும்.
அக்ரோயிட் ஃபார்முலாவை (Aykryod Formula) அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் மற்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஃபார்முலா மூலம் பணியாளர்கள் கணிசமான அளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஊதிய முறை தொடர்பான முழுமையான அவுட்லைன் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் 2025 (Budget 2025) -இல் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.