மருமகளை திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..

Father In Law Marries Daughter In Law Son Becomes Saadhu : வட இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சொந்த மருமகளையே மாமனார் திருமணம் செய்ததை அடுத்து, அவரது மகன் விரக்தியில் எடுத்த முடிவு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 13, 2025, 07:45 PM IST
  • மருமகளையே திருமணம் செய்த மாமனார்
  • துறவியான மகன்..
  • என்ன நடக்குது இங்க?
மருமகளை திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி.. title=

Father In Law Marries Daughter In Law Son Becomes Saadhu : பிற உலக நாடுகளில் எப்படியோ தெரியாது, இந்தியாவை பொறுத்தவரை அனைத்து உறவு முறைகளுக்கும் பலர் மதிப்பும் மரியாதையும் அளித்து வருகின்றனர். அந்த உறவு முறைகளின் தூய்மை கெடாமலும் பார்த்து வருகின்றனர். அப்படிப்பட்ட உறவுகளில் ஒன்று, மாமனார்-மருமகள் உறவு. இது, தந்தை-மகள் உறவு போன்றதாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த காலக்கட்டத்தில் இது போன்ற உறவுகளின் தரம் குறைந்து வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அப்படி பல சம்பவங்கள், இந்தியாவிலேயே நடந்தேரியிருக்கின்றன. அதே போன்ற ஒரு சம்பவம்தான் தற்போது மகாராஷ்டிராவிலும் நடந்திருக்கிறது.

மருமகளையே திருமணம் செய்த மாமனார்..

இந்த சம்பவம், மகாராஷ்டிராவில் உள்ள நாஷிக் பகுதியில் நடந்தேரியிருக்கிறது. ஒரு தந்தை, தன் மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணை கண்டுபிடித்து, திருமண ஏற்பாடுகளை தானே முன்நின்று பார்த்திருக்கிறார். இரு குடும்பத்தாரின் ஒப்புதலுக்கு பிறகு, நாளும் குறிக்கப்பட்டு திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு புறம் மகன் திருமண கனவுகளில் மூழ்கியிருக்க, அவன் மலை போல நம்பியிருந்த சொந்த தந்தையோ அவனை முதுகில் குத்தியிருக்கிறார்.

அந்த மாமனார், தனக்கு மருமகளாக வரப்போகும் பெண் மீது காதலில் விழுந்திருக்கிறார். இதையடுத்து அந்த பெண்ணும் இவரும் இரு வீட்டு குடும்பத்தாருக்கும் தெரிவிக்காமல் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டிருகின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் திருமண ஆசையோடு இருந்த மகன், ஆடிப்போயிருக்கிறார்.

துறவறம் பூண்ட மகன்..

தன் சொந்த தகப்பனின் கையாலும், தனக்கு மனைவியாக வர இருந்த பெண்ணின் கையாலும் துரோகத்தை சந்தித்த அந்த மகன், இவ்வுலகையே வெறுக்க ஆரம்பித்திருக்கிறார். தன் தந்தை இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்த பிறகு, அவர் இனி திருமணமே செய்யக்கூடாது என முடிவெடுத்து, தனியாக வாழ வேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

அந்த தந்தையும், உறவினர்களும் “இந்த பொண்ணு இல்லன்னா என்ன? வேற நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்” என எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்த மகன் யார் பேச்சையும் கேட்கவில்லை. சிலர், “இனி உன் தந்தையுடன் வாழ வேண்டாம். தனியாக இரு” என்றும் கூறியிருக்கின்றனர். யார் என்ன கூறியும், புண்பட்ட அந்த மகனின் மனம் மாறவே இல்லை எனக்கூறப்படுகிறது. தான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண், தன் தந்தை கைக்கே போய் விட்டதை அந்த மகனின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் இதனால் அவர் காதல் மற்றும் திருமண உறவில் இருந்த நம்பிக்கையை இழந்ததாகவும் கூறப்படுகிறது. .

இது முதல்முறையல்ல..

மேற்கூறிய விஷயத்தை போல, தொடர்ந்து பல சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியிருக்கிறது. தன் மகனை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை, மாமியார் திருமணம் செய்து கொண்டது, தனது மனைவியை அவனது முன்னாள் காதலனுக்கு கணவனே திருமணம் செய்து வைத்தது போன்ற சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது.

(இது இணையத்தில் வைரலாகும் தகவலை வைத்து எழுதப்பட்ட செய்தி ஆகும். இதற்கு ZEE MEDIA எந்த வகையிலும் பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சீச்சீ! அப்பாவே மகளை திருமணம் செய்து கொண்ட அவலம்..என்னங்க நடக்குது இங்க?

மேலும் படிக்க | தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News