இந்திய அரசு நாட்டின் பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் இந்த திட்டங்களால் நாட்டின் கோடிக்கணக்கான பெண்கள் பயன் பெறுகின்றனர். அந்த வகையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பொருளாதார அளவில் பயனளிக்கும் வகையில் சிறப்பான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெண்கள் பெரும் நிதி நன்மைகளைப் பெறுகிறார்கள்.
FD முதலீட்டை விட அதிக வருமானம்
பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்னும் அற்புதமான சேமிப்புத் திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில், பெண்கள் வழக்கமான FD முதலீட்டை விட அதிக வருமானம் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் நீங்கள் எவ்வாறு முதலீடு செய்யலாம் மற்றும் அதற்கு விண்ணப்பிக்கும் முறை என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.
2 வருடத்தில் கிடைக்கும் வருமான அளவு
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையால் 2023ம் ஆண்டு இந்திய அரசால் மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பிரத்யேக திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் 2 ஆண்டுகள் வரை கணக்கைத் தொடங்குவதன் மூலம் பலன்களைப் பெறலாம்.
கூட்டு வட்டி
MSSC திட்டம் 7.5% வட்டி விகிதத்தில் வட்டியை வழங்கும், இது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிற்கு அனுப்பப்படும். முக்கியமாக இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு காலாண்டுக்கும் கூட்டு வட்டி கிடைக்கும். அதுவும் கணக்கில் வரவு வைக்கப்படும். திட்டத்தில் முதலீடு அளவை பொறுத்தவரை, குறைந்தபட்சம் ரூ. 1,000 டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் பகுதியளவு திரும்பப் பெறும் விருப்பமும் உள்ளது. தேவைப்பட்டால் கணக்கு வைத்திருக்கும் எவரும் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 40% வரை பணத்தை எடுக்கலாம்.
மேலும் படிக்க | EPFO ELI திட்டம்: இன்னும் 3 நாள் தான் இருக்கு... UAN எண்ணை ஆக்டிவேட் பண்ணிடீங்களா
விண்ணப்பம் செய்யும் முறை
இந்திய அரசின் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மைனர் பெண்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அவர்களுக்காக கணக்கைத் தொடங்கலாம். திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். திட்டத்தில் வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
தேவையான ஆவணங்கள்
வரும் 2025இல் மார்ச் 31ஆம் தேதி வரையில் தான் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கை தொடங்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்க, பெண்கள் தங்களுக்கு அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று படிவத்தை நிரப்பலாம். விண்ணப்பத்திற்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயது சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் முகவரி சான்று போன்ற தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ