மகர சங்கராந்தி 2025: பொங்கல் நன்னாளில் இந்த ராசிகளின் பொற்காலம் தொடங்கும்... அதிர்ஷ்ட ராசிகள் எவை?

Makara Sankaranti 2025: பொங்கல் தினமான, மகர சங்கராந்தி அன்று சூரியனின் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்களின் வாழ்வின் பொன்னான காலம் பொங்கல் நாளில் தொடங்கும்.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 13, 2025, 01:58 PM IST
  • பொங்கல் நன்னாளில் மகர சங்கராந்தியன்று சூரியனின் ராசி மாற்றம் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
  • நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
  • முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மகர சங்கராந்தி 2025: பொங்கல் நன்னாளில் இந்த ராசிகளின் பொற்காலம் தொடங்கும்... அதிர்ஷ்ட ராசிகள் எவை? title=

Makara Sankaranti 2025: கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான், மகர சங்கராந்தி தினத்தன்று தனது ராசியை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகிறார். ஜனவரி 14, செவ்வாய்க் கிழமை, சூரிய பகவான் கும்ப ராசியிலிருந்து விலகி மகர ராசிக்கு மாறுகிறார். அன்றைய தினம் மகர சங்கராந்தி கொண்டாடப்பட்டு சூரிய பகவான் தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு இடம் பெயர்வார்.

ஜனவரி 14ம் தேதி காலை 9.03 மணிக்கு சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசித்து பிப்ரவரி 12ம் தேதி இரவு 10.03 மணி வரை தங்கியிருப்பார். பொங்கல் தினமான, மகர சங்கராந்தி அன்று சூரியனின் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்களின் வாழ்வின் பொன்னான காலம் பொங்கல் நாளில் தொடங்கும். 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சாதகமாகும். ஜனவரி 14 முதல் பிப்ரவரி 12 வரை அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். பண வரவு குறையாமல் இருக்கும். வேலையை மாற்ற தயாராகி வருபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருப்பதால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அனுகூலமான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். உங்களின் முக்கியமான தகவல்கள் பொதுவில் விட வேண்டாம்.

சிம்மம்: சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்நிலையில், மகர ராசியில் பிரவேசிப்பதால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் நிதி அம்சம் வலுவாக இருக்கும்.திடீர் நிதி ஆதாயம் சாத்தியமாகும். இருப்பினும், யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். முதலீட்டில் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மேலும் படிக்க |  Pongal 2025 Kolam: வீட்டில் கோலம் ஏன் போடுகிறோம், இவ்வளவு அழகான காரணம் உள்ளதா?

விருச்சிகம்: பொங்கல் நன்னாளில் மகர சங்கராந்தியன்று சூரியனின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்றே சொல்லலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். இது மட்டுமின்றி, பெரிய அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப காரியம் செய்யலாம்.

மகரம்: சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், தை மாதம் இவர்களுக்கு சாதகமாக இருக்கும். சூரியனின் சாதகமான தாக்கத்தால் உங்களின் புகழும் பெருமையும் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் அமையும். உங்கள் சமூக தொடர்புகள் வலுவடையும். முக்கிய நபர்களுடன் தொடர்பு அதிகரிக்கும். இதனால் அனுகூலம் உண்டாகும். நீங்கள் அதிக வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். நிதி ஆதாயம் காரணமாக நிதி அம்சம் வலுவாக இருக்கும். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | குபேரரின் அருளை பரிபூரணமாக பெறும் சில அதிர்ஷ்ட ராசிகள்... வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News