SIP Mutual Fund Investment: முறையான முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) என்னும் முதலீட்டு முறை, சாமானியர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழி. இதில் செய்யப்படும் நீண்ட கால முதலீடு வியக்கத்தக்க வருமானத்தை தருவதால், SIP விருப்பத்தைத் தேர்வு பலர் செய்கிறார்கள். கூட்டு வட்டியின் பலன் அதாவது 'ரிட்டர்ன் ஆன் ரிட்டர்ன்' என்னும் வருமானத்தின் மீதான வருமானம் SIP முதலீட்டில் கிடைக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் SIP
25 ஆண்டுகளுக்கு ரூ. 2,500 தொடர் முதலீடு அல்லது 20 ஆண்டுகளுக்கு ரூ. 3,500 தொடர் முதலீடு மற்றும் மற்றும் 15 ஆண்டுகளுக்கு ரூ. 4,500 முதலீடு என்ற அளவில் மாதாந்திர SIP முதலீட்டினை மேற்கொள்ளும் நிலையில், அனைத்திலும் சராசரியாக 12% ஆண்டு வருமானம் கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம். அதனால் உங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை விரிவாக புரிந்து கொள்ளலாம்.
25 வருடங்கள் SIP முதலீடு
25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 முதலீடு செய்தால், இறுதியில் கிடைக்கும் தொகை ரூ.47.44 லட்சமாக இருக்கும். இதில் அசல் தொகை ரூ.7.5 லட்சம் மற்றும் மதிப்பிடப்பட்ட வருமானம் ரூ.39.94 லட்சம்.
20 வருடங்கள் SIP முதலீடு
20 ஆண்டுகளில் மாதந்தோறும் ரூ.3,500 முதலீடு செய்தால், தோராயமாக இறுதியில் ரூ.34.97 லட்சம் கிடைக்கும், இதில் ரூ.8.4 லட்சம் அசல் தொகை மற்றும் ரூ.26.57 லட்சம் எதிர்பார்க்கப்படும் வருமானம். அதிக மாதாந்திர முதலீடுகள் இருந்த போதிலும் 25 ஆண்டுகளுக்கும் மேலான முதலீட்டு காலத்தை விட குறைவான தொகையே கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
15 வருடங்கள் SIP முதலீடு
அதே நேரத்தில், 15 ஆண்டுகளுக்கு ரூ.4,500 மாதாந்திர SIP செய்தால், தோராயமாக ரூ.22.71 லட்சம் நிதி உருவாக்கப்படுகிறது. இங்கு, அசல் தொகை ரூ.8.1 லட்சம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூ.14.61 லட்சம். குறைந்த முதலீட்டு காலத்தில் அதிக மாதாந்திர முதலீடு இருந்தாலும், கூட்டு வட்டியின் பலன்கள் குறைகிறது என்பதையும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
நீண்ட கால முதலீடு பலன்கள்
நீண்ட கால முதலீடுகளில் தான் வருமானம் வேகமாக வளர்கிறது. அதிக மாதாந்திர பங்களிப்புகள் ஆரம்பத்தில் பயனுள்ளதாகத் தோன்றினாலும், குறுகிய காலத்தில் முதலீடு செய்வது எப்போதுமே அதிக வருமானத்தைத் தராது.
முக்கிய குறிப்பு
பரஸ்பர நிதி முதலீட்டாளர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளது என்றாலும், எப்போதும் சிறந்த வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அல்ல என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில், குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் நிறைய ரிஸ்க் உள்ளது. நீங்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால், இது தொடர்பாக உங்கள் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
மேலும் படிக்க | EPFO: ரூ.2.5 கோடி நிதி கார்பஸை உருவாக்க உதவும் PF கணக்கு முதலீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ