How to avoid Location Tracking: இன்றைய காலகட்டத்தில், மோசடி செய்பவர்கள், தினமும் நூதன வழியில், மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். மோசடி செய்பவர்கள் இருப்பிடத்தைக் கண்காணிப்பதன் மூலம் மோசடி செய்ய முயற்சிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் தங்கள் தனியுரிமையை பாதுகாத்துக் கொள்வது முக்கியம்.
வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தைக் கண்காணிக்க முயற்சி
மோசடி செய்பவர்கள் உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், நீங்கள் விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுத்து உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கலாம். இதைச் செய்ய, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள WhatsApp செயலியில் உள்ள செட்டிங்கில் மாற்றங்கள் செய்யலாம்.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு முக்கிய செய்தி.... இன்னும் 2 நாள் தான் இருக்கு
பயனுள்ள WhatsApp அம்சம்
WhatsApp மிகவும் பயனுள்ள செயலி. ஆனால், மோசடி செய்பவர்களும் அதை தவறாக பயன்படுத்துகின்றனர். பொதுவாக வாட்ஸ்அப்பில் வரும் அழைப்புகளை மக்கள் எளிதாக எடுப்பதைக் காணலாம். ஏனென்றால், அந்த அழைப்பை தங்களுக்குத் தெரிந்த ஒருவர் செய்ய மட்டார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அதனால் தான் மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் மக்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்க முயற்சிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், WhatsApp செயலியின் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அழைப்புகளில் ஐபி முகவரியைப் பாதுகாக்கிறது.
ஐபி முகவரியைப் பாதுகாக்கும் அம்சம்
வாட்ஸ்அப்பில் உங்கள் தனியுரிமையை வலுப்படுத்த அழைப்புகளில் ஐபி முகவரியைப் பாதுகாக்கும் அம்சம் ஒரு சிறந்த வழியாகும். இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் உள்வரும் அழைப்புகளை நேரடியாக வாட்ஸ்அப் சேவையகங்கள் மூலம் வழிநடத்துகிறது. இது உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிப்பதை தடுக்கிறது. இந்த அம்சம் உங்கள் இருப்பிடத்தை மறைத்து உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கிறது. இது அழைப்புகள் ஹேக் செய்யப்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
வாட்ஸ் அப் அம்சத்தை ஆக்டிவேட் செய்யும் முறை
1. உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்யவும்
2. முகப்புத் திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைக் கிளிக் செய்வதன் மூலம் செட்டிங்க்ஸ் பிரிவுக்கு செல்லவும்.
3. இதற்குப் பிறகு தனியுரிமை விருப்பத்தை (Privacy option) கிளிக் செய்யவும்.
4. பின் திரையில் கீழே உருட்டி, Advanced option என்பதை கிளிக் செய்யவும்.
5. இங்கே உங்களுக்கு Protect IP Address in Calls ஆப்ஷன் கிடைக்கும். அதை ஆக்டிவேட் செய்யவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ