திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மக்களின் குரலைப் புறக்கணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
மேலும் கருத்து வேறுபாடு கொண்ட குரலை முரட்டுத்தனமாக நசுக்க அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் அவர் ஆளும் அரசை சாடியுள்ளார். ஒரு ஜனநாயகத்தில், மக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்த உரிமை உண்டு, அவர்களின் கவலைகளை கேட்டு உரையாற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும் என தெரிவித்துள்ள சோனியா காந்தி இதுதொடர்பான வீடியோ ஒன்றினை வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவரின் அறிக்கை நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களின் பின்னணியில் வெளியாகியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக-கேரள எல்லைப் பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது வன்முறை நடந்ததாக தகவல்கள் வந்துள்ள நிலையிலும், உத்தரபிரதேசத்தின் பல நகரங்களிலிருந்தும் வன்முறை பதிவாகியுள்ள நிலையிலும் இதனிடையே சோனியா காந்தி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
மேலும் "நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடிமக்களுக்கு எதிராக பாஜக அரசாங்கத்தால் வெளியிடப்படாத முரட்டுத்தனமான அடக்குமுறை குறித்து காங்கிரஸ் தனது ஆழ்ந்த வேதனையையும் கவலையையும் வெளிப்படுத்துகிறது" என்று சோனியா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் "பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு" எதிராக தான் நாடு முழுவதும் IITs, IIMs மற்றும் பிற முன்னணி கல்வி நிறுவனங்களில் "தன்னிச்சையான போராட்டங்கள்" நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) தொடர்பாக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இருப்பினும், தற்போது தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற முறையான எந்த முயற்சியும் தொடங்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தால் கூறப்படுகிறது. எனினும் வரும் காலத்தில் நிச்சையம் அனைத்து மாநிலங்களிலும் இந்த பதிவேடு செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்படுத்தும் பட்சத்தில் 1971-க்கு முன்னர் அடையாள ஆவணங்களை நாம் முன்வைத்து நமது இந்திய குடியுரிமையினை நிரூபிக்க வேண்டும்.
नागरिकता संशोधन कानून भेदभावपूर्ण है। नोटबंदी की तरह एक बार फिर एक-एक व्यक्ति को अपनी एवं अपने पूर्वजों की नागरिकता साबित करने के लिए लाइन में खड़ा होना पड़ेगा : कांग्रेस अध्यक्ष श्रीमती सोनिया गांधी #IndiaAgainstCAA pic.twitter.com/DutghemChe
— Congress (@INCIndia) December 20, 2019
அதேப்போல் குடியுரிமை திருத்த சட்டமானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிச் சென்று இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டம்(CAA) மீது டிசம்பர் 15 அன்று டெல்லியில் எதிர்ப்புக்கள் அதிகரித் துவங்கின என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறை ஆர்ப்பாட்டங்கள் காணப்பட்ட நிலையில், தேசிய தலைநகரில் போக்குவரத்து மற்றும் மெட்ரோ நிலையங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடந்த சில நாட்களாக தொடர்கின்றன.