டாய்லெட்டை சுத்தம் பண்ண நான் எம்.பி ஆகல: பாஜக எம்.பி. பிரக்யா சிங்

கழிப்பறைகள் மற்றும் வடிகால்களை சுத்தம் செய்ய எம்.பி. ஆகவில்லை என்று பாஜகவின் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 22, 2019, 01:30 PM IST
டாய்லெட்டை சுத்தம் பண்ண நான் எம்.பி ஆகல: பாஜக எம்.பி. பிரக்யா சிங் title=

செஹோர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசாங்கம் இந்தியாவின் மிகப்பெரிய தூய்மைப் பிரச்சாரமான 'ஸ்வச் பாரத் அபியான்' தீவிரமாக முன்னெடுத்து வருவதோடு, மிகுந்த உற்சாகத்துடன் தூய இந்தியா இயக்கத்தில் அனைவரும் சேர்ந்து, இந்த இயக்கத்தை ஊக்குவிக்கவும், தேசத்தை தூய்மைப் படுத்தவும் அனைவருக்கும் ஆளும் பாஜக அழைப்பு விடுத்து வருகிறது. 

2014 அக்டோபர் 2 ஆம் தேதி தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை 2019-க்குள் முற்றிலும் நீக்க வேண்டும் என்பதே ஆகும். இந்தியாவை திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதிசெய்தல் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். 

ஆனால் பாஜகவை சேர்ந்த மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஆனா சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செஹோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசும் போது, "நான் கழிப்பறைகள் மற்றும் வடிகால்களை சுத்தம் செய்ய" எம்.பி. ஆகவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

 

அதாவது, நான் என்ன காரணத்துக்காக எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டேனோ அதை சிறப்பாகச் செய்வேன். ஒரு எம்.பி என்ற முறையில் எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து தொகுதியின் மேம்பாட்டை உயர்த்த வேலை செய்வேன். உங்களின் சின்ன சின்ன குறைகளை, அந்த ஊரின் பிரதிநிதிகளை வைத்து சரிசெய்துக்கொள்ளுங்கள். இந்த மாதிரி விசியங்களுக்காக எனக்கு அடிக்கடி போன் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இனிமேல் போன் செய்யக்கூடாது எனக் கோபமாக கூட்டத்தில் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரின் பேச்சு அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending News