ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவம் கண்டனத்திற்கு உள்ளானது. ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்,
ராஞ்சி விமான நிலையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தையை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்ததற்காக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் DGCA ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது. இரு வார காலத்திற்கு முன், ராஞ்சி-ஹைதராபாத் விமானத்தில், மாற்று திறனாளி குழந்தையின் குடும்பம் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், இண்டிகோ நிறுவனம் அனுமதி மறுத்தது.
இண்டிகோ விமான நிறுவனம் அதன் பயணிகளை தவறான முறையில் கையாண்டது என கூறியது. இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தையை இண்டிகோ விமான நிறுவனம் கையாண்ட விதம் கண்ணியக்குறைவானது எனவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Live Update: மே 28, 2022: இன்றைய முக்கிய செய்திகள்
விமானப் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனம், ஒரு விமான நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பது இதுவே முதல் முறை.
முன்னதாக, DGCA மே 9ம் தேதி அன்று இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. "இண்டிகோ விமான ஊழியர்கள் மாற்றுத் திறனாளி குழந்தையை மோசமாக கையாண்டது. அதன் மூலம் நிலைமை மேலும் மோசமானது" என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை அன்புடன் கையாண்டிருந்தால், அதனை அமைதிப்படுத்தி இருக்கலாம் என்றும், பயணிக்க் அனுமதி மறுப்பு தீவிர நடவடிக்கையின் தேவையை, அதன் மூலம் தவிர்த்திருக்கலாம் என்றும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் விமான ஊழியர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடந்த கொள்ள தவறிவிட்டனர் எனகூறிய DGCA, "இதைக் கருத்தில் கொண்டு, டிஜிசிஏவில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரி, சம்பந்தப்பட்ட விமான விதிகளின் கீழ் விமான நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது," என்று அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும் படிக்க | எடப்பாடிக்கு எதிராகும் ஜெயக்குமார்? எண்ட்ரிக்கு காத்திருக்கும் சசிகலா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR