Cyclone Yaas: கரையை கடக்கும் சூறாவளி யாஸ் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ள யாஸ் புயல், இன்று (புதன்கிழமை) ஒடிசாவில் கரையைக் கடக்கும். அப்போது, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டில் மழை பொழியும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2021, 07:32 AM IST
  • கரையை கடக்கும் சூறாவளி யாஸ்
  • பாலசூருக்கு தெற்கே இன்று மதியம் கரையக் கடக்கும்
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Cyclone Yaas: கரையை கடக்கும் சூறாவளி யாஸ்  மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் title=

புதுடெல்லி: மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ள யாஸ் புயல், இன்று (புதன்கிழமை) ஒடிசாவில் கரையைக் கடக்கும். அப்போது, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டில் மழை பொழியும்.

யாஸ் சூறாவளி புதன்கிழமை அதிகாலை பத்ராக் மாவட்டத்தின் தம்ரா துறைமுகத்திற்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்தது.. "சூறாவளி யாஸ் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா கடற்கரைக்கு அருகில் தம்ராவின் வடக்கே மற்றும் பாலசூருக்கு தெற்கே இன்று மதியம், 130-140 கிமீ வேகத்துடன் கூடிய 'மிகக் கடுமையான சூறாவளி புயலாக' மாறும் என்று இன்று அதிகாலை 0300 மணிக்கு வழங்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ( India Meteorological Department ) தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியை யாஸ் (Yaas) சூறாவளி நெருங்கிக்கொண்டிருக்கிறது. புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

ALSO READ | Cyclone Yaas: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம்

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மற்றும் கியோஞ்சர் மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர, பாலசோர், பத்ராக், கேந்திரபாரா மற்றும் ஜகஸ்திங்க்பூர் மாவட்டங்களும் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் இருந்து செல்லும் ரயில்களின் சேவையை, எதிர்வரும் 29ந்தேதி வரை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

Also Read | Cyclone Yaas: மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது, மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News