BIZARRE! பெண்களிடம் மொபைல் இருந்தால், ஆண்களுடன் பேசி பழகி, அவர்களுடன் ஓடிவிடுவார்கள்!

பெண்களுக்காக குரல் எழுப்பி, பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க மகளிர் ஆணைய உறுப்பினர் பெண்களின் மொபைல் போன்களை கண்காணிக்க வேண்டும் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பியுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 10, 2021, 05:36 PM IST
  • பெண்களிடம் மொபைல் இருந்தால், ஆண்களுடன் பேசி பழகி, அவர்களுடன் ஓடிவிடுவார்கள்!
  • இந்தக் கருத்தை சொல்வது மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மீனா குமாரி
  • இவர் உத்திரப் பிரதேச மாநில மகளின் ஆணையக் குழு உறுப்பினர்
BIZARRE! பெண்களிடம் மொபைல் இருந்தால், ஆண்களுடன் பேசி பழகி, அவர்களுடன் ஓடிவிடுவார்கள்! title=

இளம் பெண்களிடம் மொபைல் போன் இருந்தால், வாலிபர்களுடன் பேசிப் பழகி, சில நாட்களுடன் அவர்களுடன் சென்று விடுவார்கள். எனவே அவர்களின் கைப்பேசிகள் கண்காணிக்கப்பட வேண்டும்”. இதைச் சொல்வது யாரோ ஒருவர் அல்ல, உத்தரப் பிரதேச மாநில. மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மீனா குமாரி. 

பெண்களுக்காக குரல் எழுப்பி, பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க ஒருவரின் அவதூறான இந்த கருத்து, அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது.

அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். பெண்கள் உரிமை ஆணைய உறுப்பினரின் மனநிலை இதுவாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், பொறுப்பான பதவிகளில் இருக்கும் பலரும் இப்படி தாழ்வான கருத்துக்களை தெரிவிப்பது முதல்முறையல்ல. 

அதிலும் இந்தப் பெண்மணி இந்தக் கருத்தை எப்போது சொன்னார் தெரியுமா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசும்போது தான். 'பெண்கள் தங்கள் மொபைல் போன்களில் தொடர்ந்து பேகின்றனர். இளைஞர்களுடன் பழகிய பிறகு, அவர்களுடன் ஓடிவிடும் அளவிற்கு விஷயங்கள் முன்னேறுகின்றன' என்ற தரக்குறைவான எண்ணத்தை வெளிப்படுத்தினார் உ.பி. மகளிர் ஆணைய உறுப்பினர்

Also Read | 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை 

அலிகரில் பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான புகார்கள் தொடர்பான பொது விசாரணையின் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலிகர் மற்றும் பரேலியில் நடந்த நிகழ்வுகளை மேற்கோள் காட்டி பாலியல் வன்புணர்வு வழக்குகள் வழக்கமாகிவிட்டதாக மகளிர் ஆணைய உறுப்பினர் மீனா குமரியிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்கிறார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன என்று பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார்.

Also Read | குழந்தைகளின் கண்பார்வையை மேம்படச் செய்யும் உணவுகள்

முதலில் பேசிய மீனா குமாரி, ”மிஷன் சக்தி” (Mission Shakti) இயக்கம் முழு பலத்துடன் நடந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார், பின்னர் இதுபோன்ற சூழ்நிலைகளைப் பற்றி சமூகமே விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மிஷன் சக்தி என்பது சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் பெண்களின் வாழ்க்கையை ளை மேம்படுத்துவதற்கான ஒரு சுயசார்பு திட்டம்.

”நமது பெண் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், நிலைமை என்ன, அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களின் தொலைபேசிகளை கண்காணிக்க வேண்டும். பெண்கள் தங்கள் மொபைல் போன்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அது அவர்கள் திருமணம் செய்து் கொள்வதற்காக ஓடிப்போகும் அளவிற்கு செல்கிறது” என்று மீனா குமாரி இந்தியில் கூறுகிறார்.

Also Read | June 10th: மதுரையின் மைந்தன் சுந்தர் பிச்சையின் பிறந்த நாள் இன்று

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News