புதுடில்லி: பீகார் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை எந்தக் கட்சி பெரும்பான்மை கிடைக்கும் என என்பதில் இன்னும் சரியான நிலவரம் தெரியவில்லை. பெரும்பான்மை விவகாரத்தில் முன்னும் பின்னுமாக தோன்றினாலும், பீகார் தேர்தலின் (Bihar Elections Results 2020) இறுதி முடிவுகளுக்காக மாலை வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை. ஏனென்றால், தற்போது 42 இடங்களில் 500 வாக்குகளும், 74 இடங்களில் 1000 வாக்குகளும் வித்தியாசம் உள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (BJP-led NDA alliance) தெளிவான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் காணமுடிகிறது. ஆனால் அதில் ஒரு ஆச்சரியமும் இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து வருகிறது. இதுவரை வெளியான எண்ணிக்கையின்படி, பாஜக, ஜேடியு தலைமையிலான (BJP-JDU alliance) என்டிஏ 130 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில், மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், பீகாரில் பாஜக இதுவரை சிறப்பான இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 53 இடங்களை வென்றது. இந்த முறை 74 இடங்களில் பிஜேபி முன்னிலை வகிக்கிறது. ஜேடியு 48 இடங்களிலும், விஐபி 8 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. மறுபுறம், எதிர்க்கட்சியின் மெகா கூட்டணியைப் (Mahagathbandhan) பற்றி பேசினால், ஆர்ஜேடி 60 மற்றும் காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது, இந்த முறை தேர்தல் போட்டியில் பாஜக ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவாகி வருகிறது என்பது இந்த போக்குகளிலிருந்து தெளிவாகிறது.
ALSO READ | பிறந்தநாள் பரிசாக தேஜஸ்விக்கு மக்கள் முதல்வர் பதவியை அளிப்பார்கள்: RJD நம்பிக்கை
இப்போது பாஜக அதிக பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது, நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக அமருவாரா? அரசியல் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், தேர்தலுக்கு முன்னரே, பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும், முதல்வராக நிதீஷ்குமார் மட்டுமே இருப்பார் என்று பாஜக கூறியிருந்தது. ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், ஜே.டி.யுவை விட பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. எனவே, பாஜக கட்சிக்குள் முதலமைச்சரின் நாற்காலி பெற வேண்டும் என்ற கோரிக்கை எழக்கூடும்.