மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதிதிட்டம் நடப்பதாக மேற்கு வங்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது!
மேற்கு வங்காளத்தில் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 18 இடங்களை கைப்பற்றி வலுவான அடித்தளத்தை அமைத்து உள்ளது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளுக்கும் கடும் அதிருப்தியை அளித்துள்ளது.
தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே கடுமையான மோதல்போக்கு சம்பவங்களும், உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கன்ஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டை உளுக்கிய இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குவங்க அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக "மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாநிலத்தில் எந்தஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை, நிலைமை கட்டுக்குள் இருக்கிறது" என மேற்கு வங்க அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது.
மேலும் மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க அரசியல் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மேற்குவங்க அமைச்சருமான பர்த்தா சட்டர்ஜி பேசுகையில், மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் நடக்கிறது. அரசியல் ரீதியாக திட்டமிட்டு இது செயல்படுகிறது. ஆட்சியை கைபற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முறைகேடாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பான முறையில் பாஜக-வை எதிர்ப்பவர்களை நசுக்க மத்திய அரசு முயலுகிறது. ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.