செப்டம்பர் 5 முதல் மாநிலத்தில் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்..!

செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்...!

Last Updated : Jul 22, 2020, 12:22 PM IST
செப்டம்பர் 5  முதல் மாநிலத்தில் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்..! title=

செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்...!

செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர அரசு (Andhra Pradesh) திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தில் கொரோனா வைரஸின் (Coronavirus) நிலை அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உண்மையில், மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து கல்வி வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்திய முதலமைச்சர் YS.ஜகன் மோகன் ரெட்டி (YS Jagan Mohan Reddy), பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர். கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் ஆதிமலாப்பு சுரேஷ் கூறுகையில்..... "செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் நிலைமையை கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

READ ALSO | Vidhya Veerappan: கல்வியும், ஆசிரியர்களும் என்னை வடிவமைத்தன என்று கூறும் வீரப்பனின் மகள்!!

மேலும் அவர் கூறுகையில், "பள்ளி திறக்கப்படாத வரை, மதிய உணவின் ரேஷன் குழந்தைகளின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறினார். இது மட்டுமல்லாமல், LKG மற்றும் UKG அரசு பள்ளிகளிலும் தொடங்கப்படும். மேலும், மாநிலத்தில் போட்டித் தேர்வுகளான EMset, JEE மற்றும் IIIT போன்றவற்றுக்கான பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்படும். மாநில அளவில் கல்வி நிலையை மேம்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் இணை இயக்குநர் பதவிகள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

இது தவிர, “கல்வியை மேம்படுத்துவதற்காக, மாவட்ட அளவில் இணை இயக்குநர் பதவிகளும் உருவாக்கப்படுகின்றன. முதலமைச்சர் சமீபத்தில் மாநில அளவில் இரண்டு இயக்குநர் ரேஞ்ச் பதவிகளை உருவாக்குவது குறித்தும் அவர் பேசினார். இதன் மூலம் அரசுப் பள்ளிகள் ஆங்கில ஊடகமாக இருக்கும். மாநிலத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஜூனியர் பள்ளி திறக்க திட்டம் உள்ளது" என்றார். 

Trending News