கடும் பனிமூட்டம் காரணமாக கிரேட்டர் நொய்டா அருகே நடந்த கார் விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லி (Delhi) உட்பட வட இந்தியா (North India) முழுவதும் குளிர் (Cold) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியின் சப்தர்ஜங் பகுதில் காலை 2.5 டிகிரி வெப்பநிலையை (Temperature) பதிவாகி உள்ளது. அதிக பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. டெல்லி மட்டுமல்ல, அதனை சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய மாவட்டங்களில் கடும் குளிர் தொடர்கிறது.
இந்நிலையில் டெல்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் 11 பேருடன் வந்த கார், டாங்கர் என்ற இடத்தில், கெர்லி கால்வாயில் பாய்ந்து கவிழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பயணிகள் அனைவரையும் மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களில் 6 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடுமையான மூடுபனி காரணமாக சாலைகளில் காட்சித் திறன் வெகுவாக குறைந்து விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.