வரும் ஜூன் மாதம் 14 முதல் ஜூன் 18 வரை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அஜிங்கியா ரஹானே செயல்படுவார். இந்த போட்டிக்குக் கருண் நாயருக்கு வாய்ப்பு அளிக்கபட்டு உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, புவனேஷ்வர் குமார் போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது. இந்த போட்டி பெங்களூர் எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தான் vs இந்தியா டெஸ்ட் அணி விவரம்:-
அஜிங்கிய ரஹானே (கேப்டன்), ஷிகர் தவண், ராகுல், முரளி விஜய், புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், மொகமத் ஷமி, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர்.
#TeamIndia for one-off Test against Afghanistan announced
Ajinkya (Capt), Shikhar, Vijay, KL Rahul, Pujara, Karun Nair, Saha (wk), Ashwin, Jadeja, Kuldeep, Umesh, Shami, Hardik, Ishant, Shardul #INDvAFG
— BCCI (@BCCI) May 8, 2018
இந்த வருடம் ஜூன் மாதம் தொடக்கி செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்யும் இந்திய அணி, அங்கு டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலில் டப்ளின் மைதானத்தில் நடைபெறும் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி ஜூன் 27 மற்றும் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 போட்டிகள் ஜூலை மாதம் 3, 6, 8 ஆம் தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 12, 14, 17 ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலி செயல்படுவார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் vs இந்தியா டி-20 அணி விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. தவான், 3. ரோகித் சர்மா, 4. லோகேஷ் ராகுல், 5. சுரேஷ் ரெய்னா, 6. மணீஷ் பாண்டே, 7. டோனி (விக்கெட் கீப்பர்), 8. தினேஷ் கார்த்திக், 9. சாஹல், 10. குல்தீப் யாதவ், 11. வாஷிங்டன் சுந்தர், 12. புவனேஸ்வர் குமார், 13. பும்ரா, 14. ஹர்திக் பாண்டியா, 15. சித்தார்த் கவுல், 16. உமேஷ் யாதவ்.
#TeamIndia for two-match T20I series against Ireland announced
Virat (Capt), Shikhar, Rohit, KL Rahul, Raina, Manish, MS Dhoni(wk), Dinesh Karthik, Chahal, Kuldeep, Sundar, Bhuvneshwar, Bumrah, Hardik, Kaul, Umesh #IREvIND
— BCCI (@BCCI) May 8, 2018
இங்கிலாந்தில் vs இந்தியா ஒருநாள் அணி விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. தவான், 3. ரோகித் சர்மா, 4. லோகேஷ் ராகுல், 5. சுரேஷ் ரெய்னா, 6. ஸ்ரேயாஸ், 7. டோனி (விக்கெட் கீப்பர்), 8. தினேஷ் கார்த்திக், 9. சாஹல், 10. குல்தீப் யாதவ், 11. வாஷிங்டன் சுந்தர், 12. புவனேஸ்வர் குமார், 13. பும்ரா, 14. ஹர்திக் பாண்டியா, 15. சித்தார்த் கவுல், 16. உமேஷ் யாதவ்.
#TeamIndia for three-match ODI series against England announced
Virat (Capt), Shikhar, Rohit, KL Rahul, Shreyas, Rayudu, MS Dhoni(wk), Dinesh Karthik, Chahal, Kuldeep, Sundar, Bhuvneshwar, Bumrah, Hardik, Kaul, Umesh #ENGvIND
— BCCI (@BCCI) May 8, 2018
பின்னர் ஆகஸ்ட் மாதம் முதல் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.