நமது நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சரியான மற்றும் ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதிப்படுத்த சமச்சீரான உணவு தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதும், சோம்பல் ஏற்படாமல் இருப்பதற்கும் அவசியமானது உணவு தான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் செய்யத் தவறினால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். வழிவகுக்கும். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், சாதாரண காய்ச்சலில் இருந்து மீளவே பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியிருக்கும்.
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களின் பட்டியல் இங்கே உள்ளது, இவற்றை உண்டால், விரைவில் குணமடையலாம். இந்த உணவுப் பொருட்கள் உங்கள் உடலை உடனடியாகப் புத்துணர்ச்சியடையச் செய்து, கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும்.
மேலும் படிக்க | ஆரோக்கியமான இதயத்தை வலுவிழக்கச் செய்யும் ‘இந்த செயல்கள்’ அவசியமா?
க்ரீன் டீ
இது உண்மையில் ஒரு உணவு அல்ல, ஆனால் சில வகை கிரீன் டீயை பருகுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவும், அதிலும் குறிப்பாக காய்ச்சல் காலத்தில் க்ரீன் டீ உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும் படிக்க | உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கலாம்! அதற்காக அதிக உப்பு உண்ணவேண்டாம்! உப்பின் ஆபத்து
பழங்கள் மற்றும் காய்கறிகள்
குறிப்பாக நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது பழங்கள் மற்றும் காய்கறிகளை தொடர்ந்து உண்பது, நீங்கள் விரைவாக குணமடைய உதவும். இயற்கையான சத்து உடலுக்குக் கிடைக்கும்போது விரைவில் குணம் பெறலாம்.
ஆரஞ்சு
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, உடலில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் சி ஆகும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை உடனடியாக வலுவாக வைத்திருக்கும். அவற்றில் முக்கியமானது ஆரஞ்சு.
நீங்கள் இறைச்சி உண்பவரா? இறைச்சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நல்ல வழியாக இருக்கலாம். அசைவ உணவுகளில் துத்தநாகம் போதுமான அளவு இருக்கும். அது உடல் வலுப்பெற அன்றைய தேவைகளை பூர்த்தி செய்யும். பொதுவாக, துத்தநாக சத்து, உடல் வளர்ச்சிக்கும், செல் வளர்ச்சிக்கும் அவசியமானது என்பதால், துத்தநாகம் இருக்கும் பிற உணவுகளையும், நோய்வாய்ப்பட்டவர்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | அதிக தேநீர் அருந்துவது ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் தெரியுமா? அச்சமூட்டும் ஆபத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ