கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக செரிமானத்திற்கு, கற்பூரவல்லி இலைகளை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது தவிரவும் இந்த இலைகள் பல நோய்களைக் குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கற்பூரவல்லி இலைகளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதன் இலைகளில் உள்ளன, அவை பல நோய்களைக் குணப்படுத்தும் திறன் கொண்டவை. கற்பூரவல்லி இலைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி உள்ளது, இந்த இலைகளை உட்கொண்டால், பல அற்புதமான பலன்களைப் பெறலாம்.
செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்கும்
ஓமவல்லி இலைகள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலைகளை உட்கொள்வதால் அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வாயு போன்றவை குணமாகும். அதன்படி உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால், ஓமவல்லி இலைகளை உட்கொள்வது நன்மை பயக்கும். இந்த இலைகளின் சாறு செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
மேலும் படிக்க | தாம்பத்திய வாழ்க்கையை சீர்குலைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு!
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்
கற்பூரவல்லி இலைகள் நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை. அதன்படி கற்பூரவல்லி இலைகளை வேகவைத்து குடித்தால் இருமல், சளி போன்ற நோய்கள் சரியாகிடும். ஏனெனில் அவற்றில் தைமால் என்கிற மூலிகை உள்ளது, இது தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
கீல்வாதத்தை குணப்படுத்த உதவும்
கற்பூரவல்லி இலையில் உள்ள பண்புகள் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். ஓமவல்லி இலைகள் வீக்கத்தை நீக்கும். இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம் முழங்கால் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி பிரச்சனை நீங்கும். மேலும் ஓமவல்லி இலைகள் கீல்வாதத்தில் நன்மை பயக்கும்.
மன அழுத்தத்தை போக்க உதவும்
என்சிபிஐ இன் அறிக்கையின்படி, கற்பூரவல்லி இலைகள் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த இலைகள் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்படுபவர்களின் பிரச்சனைகளை நீக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ