முளை கட்டிய கொத்துக்கடலை... காலை உணவில் கட்டாயம் இருக்கணும்... காரணம் இது தான்!

Sprouted Channa: ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் கொத்துக்கடலை நிச்சயம் இருக்கும். சிலர் இதனை வேக வைத்து சுண்டலாகவோ அல்லது  மசாலாக்கள் சேர்த்து குருமாவாகவோ செய்து சாப்பிடுவார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 6, 2023, 03:34 PM IST
  • முளை கட்டிய கொத்துக்கடலையை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
  • எடை இழக்க நினைப்பவர்களுக்கு புரதம் மிகவும் முக்கியம்.
  • முளை கட்டிய கொத்துகடலையின் வியக்கத்தக்க நன்மைகள்.
முளை கட்டிய கொத்துக்கடலை... காலை உணவில் கட்டாயம் இருக்கணும்... காரணம் இது தான்! title=

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் முளை கட்டிய தானியங்களை அதிகம் உணவில் சேர்க்கின்றனர். முளை கட்டிய தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளன. பெரும்பாலானோர், முளை கட்டிய தானியங்களை  காலை உணவாக சாப்பிடுவார்கள்.  ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் கொத்துக்கடலை நிச்சயம் இருக்கும். சிலர் இதனை வேக வைத்து சுண்டலாகவோ அல்லது  மசாலாக்கள் சேர்த்து குருமாவாகவோ செய்து சாப்பிடுவார்கள். கொத்துகடலையில் அதிக அளவு புரதம் காணப்படுகிறது. எடை இழப்பவர்களுக்கு புரதம் மிகவும் முக்கியம் என்பதோடு, இது ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. முளை கட்டிய கொத்துக்கடலையை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

முளை கட்டிய கொத்துகடலையின் வியக்கத்தக்க நன்மைகள்

கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்

முளை கட்டிய கொத்துக்கடலையை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இதில் உடலில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்துகள் கொலஸ்ட்ராலைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறந்த செரிமானம்

முளை கட்டிய கொத்துக்கடலை சாப்பிடுவது நல்ல செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள்  இருந்தால், முளை கட்டிய கொத்துக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் நிரந்திர தீர்வு கிடைக்கும். முளை கட்டிய கொத்துக்கடலையை காலையில் தவறாமல் சாப்பிடுங்கள்.

ரத்த அழுத்த கட்டுப்பாடு

முளை கட்டிய கொத்துக்கடலை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்து. இதில் நல்ல அளவு பொட்டாசியமும் உள்ளது. பொட்டாசியம் உடலில் அதிகரிக்கும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

முளை கட்டிய கொத்துக்கடலை இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன. இவை முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குளிர்காலத்தில் நோய்கள் எதுவும் அண்டாமல் இருக்க முளைகட்டிய கொத்துக்கடலை சாப்பிடவும்.

எடையை குறைக்க உதவும்

முளை கட்டிய கொத்துக்கடலை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. புரதம் அதிகம் இருப்பதால், எடை குறைப்பதிலும் பங்கு வகிக்கிறது. புரதத்தை உட்கொள்வதால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்ததாக இருக்கும். அதோடு வலுவான தசைகள் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும்.

மேலும் படிக்க | கண்ணுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் அழகைத் தரும் ராஸ்பெர்ரியின் ஆரோக்கிய நன்மைகள்

வலிமையான எலும்புகள்

முளை கட்டிய கொத்துக்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் பிற தாதுக்களின் பண்புகள் எலும்புகளை பலப்படுத்துகின்றன. முளை கட்டிய கொத்துக்கடலையை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரத்த சோகை அபாயத்தைத் தடுக்கிறது

முளை கட்டிய கொத்துக்கடலை ஓரளவு இரும்புச் சத்தும் உள்ளது. இந்த இரும்புச்சத்து இரத்த சோகையை உடலுக்குள் நுழைய விடாமல் உங்களை முழுமையாக ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆற்றலை கொடுக்கும் முளை கட்டிய கொத்துக்கடலை

முளை கட்டிய கொத்துக்கடலை தினசரி வேலையால் ஏற்படும் சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கும். அவற்றில் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும். இது உங்களை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

முளை கட்டிய தானியங்களை சாப்பிடும் முறை

முளை கட்டிய தானியங்கள் ஊட்டச்சத்தின் ஆதாரமாக கருதப்படும். ஆனால், காலை நேரத்தில் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காரணம், தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டச் செய்வதால், அவற்றில் அமிலத்தன்மை அதிகரித்து வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாகச் சேர்ந்திருக்கும். பொதுவாக, காலை நேரம் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரக்கும். அப்போது முளைகட்டிய தானியத்தை சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை காலையில் முளைகட்டிய தானியங்களை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Prune For Health: அனீமியா, செரிமானக் கோளாறுகளை போக்கும் கொடிமுந்திரி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News