Skin care tips: கடுமையான வெப்பம் நிலவி வரும் இந்த நேரத்தில், சரும பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வெயிலால் உடல் சீக்கிரம் கருத்து போவதால், சரும பராமரிப்பு அவசியமானதாகிறது.
வெயிலால் அதிக பாதிக்கப்படும் உடல் பாகத்தில் முக்கியமானவை கைகளும் பாதங்களு. கைகள், கால்களில் அதிக வெயில் படுவதால் அதன் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சரும கருத்து போவதை டானிங் எனக் கூறுகிறோம். கைகள், பாதங்களில் டானிங்கை போக்க, பெண்கள் விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் வீட்டு வைத்தியம் மூலம், செலவில்லாமல் கை, பாதங்களின் பளபளப்பை மீட்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்கண்ட வழிகளில் டானிங்கை நிமிடத்தில் போக்கலாம்.
1. தயிரைப் பயன்படுத்துங்கள் : தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும். தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இது கருமையை போக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது. இது சருமம் புத்துயிர் பெற உதவும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு ஸ்பூன் தயிரை தடவி உலர விடவும். தயிர் உலரத் தொடங்கும் போது, சில நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு அதை தண்ணீரில் கழுவவும்.
2. எலுமிச்சை: எலுமிச்சை ஆரோக்கியத்துடன் சருமத்திற்கும் நன்மை பயக்கும். சருமத்தை பளபளப்பாக்க எலுமிச்சையை உபயோகிப்பது ஒரு சிறந்த வழியாகும். ஒரு எலுமிச்சை பிழிந்து, அதன் சாற்றின் சில துளிகளை உங்கள் கால்களிலும் கைகளிலும் தேய்க்கவும். சாற்றை தடவி 15 நிமிடங்கள் உலர விடவும், பின்னர் தண்ணீரில் கழுவவும். இது உங்கள் சருமம் புத்துயிர் பெற இது உதவும்.
3. வெள்ளரிக்காய் : வெள்ளரி சருமத்தை சிவப்பாக்கும் என தோல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தின் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். ஒரு வெள்ளரிக்காயை தட்டி, அதன் சாற்றை உங்கள் கை கால்களில் தடவவும். இதை 15 நிமிடங்கள் அப்படியேவிட்டுவிட்டு, பின்னர் கழுவவும். இதை அடிக்கடி செய்யலாம்.
4. தக்காளி : தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது சூரியனின் கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை பளபளப்பாக்குகிறது.
5. ஆரஞ்சு : ஆரஞ்சு உடல் ஆரோக்கியத்தோடு சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. ஹைப்பர்பிக்மெண்டேஷனுக்கு சிகிச்சையளிக்கிறது. நீங்கள் ஒரு ஆரஞ்சு பழத்தை சாற்றை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். சாறு 15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும், பின்னர் அதை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
குறிப்பு- செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. இதை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. தோல் நிபுணர்களின் ஆலோசனையை பெற்று இதைப் பின்பற்றுங்கள்.
ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR