டயட், உடற்பயிற்சி இல்லாமலேயே தொப்பையை குறைக்கலாம்... இதை செஞ்சா போதும்!

உடல் எடையைக் குறைப்பதும், தொப்பையைக் குறைப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். உடல் எடையை குறைப்பது எளிது. அதே சமயம் தொப்பையை கரைப்பது கடினம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 28, 2022, 06:49 PM IST
  • சர்க்கரை அதிகாளவில் உட்கொள்ளவது, கல்லீரலில் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
  • இன்றைய பிஸியான வாழ்க்கையில், உடற்பயிற்சி செய்ய பலருக்கு நேரம் இருப்பதில்லை.
  • நமது எடை குறைப்பு பயணத்தில் தண்ணீர் ஒரு முக்கிய அங்கம்.
டயட், உடற்பயிற்சி இல்லாமலேயே தொப்பையை குறைக்கலாம்... இதை செஞ்சா போதும்! title=

இன்றைய பிஸியான வாழ்க்கையில், உடற்பயிற்சி செய்ய பலருக்கு நேரம் இருப்பதில்லை. டயட்டையும் உறுதியாக பின்பற்ற முடிவதில்லை. கடுமையான உடற்பயிற்சிகள், டயட்டுக்குப் பிறகும் தொப்பை குறையலையா... கவலை வேண்டாம். இவை இல்லாமலேயே, வாழ்க்கை முறையில், சில முக்கிய மாற்றங்கள் செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பை அகற்றலாம். இந்நிலையில், உங்கள் தொப்பையை குறைக்க உதவும் சில முக்கியமான டிப்ஸ்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொப்பையை குறைக்க உதவும் சில டிப்ஸ்

1. உணவை சரியாக மென்று சாப்பிடுங்கள் 

சாப்பிடும் போது, அவசரப்படாமல். மெதுவாக சாப்பிடுங்கள். உங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடுங்கள். உங்கள் தொப்பையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், அதோடு, நீங்கள் உணவு உண்ணும் போதெல்லாம், மெதுவாக சாப்பிடவும், உணவை சரியாக மென்று சாப்பிடுவதன் மூலம், உமிழ் நீர் உணவில் நன்றாக கலந்து, உணவை திறம்பட செரிக்க உதவுகிறது, இது ஜீரணிக்க எளிதாக்குகிறது. கூடுதலாக, சிறந்த செரிமானம் காரணமாக, நீண்ட நேரம் உங்களுக்கு பசி எடுக்காமல் இருக்கும். 

மேலும் படிக்க | குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க இந்த ஸ்னாக்ஸ் உதவும் 

2 . உணவின் அளவில் கவனம் தேவை

ஒரு நேரத்தில் அதிக அளவு உணவை உட்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தேவையானதை விட அதிக உணவை உட்கொள்ளாமல் கவனமாக இருக்கவும். ஒரு சிறிய தட்டை எடுத்து, அதில் கொஞ்சமாக உணவை எடுத்துக் கொண்டு சாப்பிடுவது நல்லது.

3. நிறைய தண்ணீர் குடிக்கவும்

நமது எடை குறைப்பு பயணத்தில் தண்ணீர் ஒரு முக்கிய அங்கம். உடல் எடையை குறைக்க காலி வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள். இது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உங்கள் பசியைத் தணித்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிறைந்திருக்கும். சூடான அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது இன்னும் சிறந்தது. எனவே, ஒரு நாளைக்கு பல முறை சிறிது சிறிதாக தண்ணீர் குடிக்கவும். இதனால், வயிற்றில் ஏகப்பட்ட கொழுப்பு சேர்ந்து உருவான தொப்பையும் உடல் எடையும் நன்றாக குறையும்.

4. இனிப்புகள் சாப்பிடுவதை குறைக்கவும்

சர்க்கரை அதிகாளவில் உட்கொள்ளவது, கல்லீரலில் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. இது கொழுப்பு சேர வழிவகுக்கும். மைதா, ரொட்டி, வெள்ளை அரிசி, கேக் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை மாலை 5 மணிக்கு மேல் உட்கொள்ள வேண்டாம். இதனால், நாள் செல்லச் செல்ல, உங்கள் வளர்சிதை மாற்றமும் குறையத் தொடங்குகிறது. எனவே நீங்கள் இனிப்பு சாப்பிட விரும்பினால் காலை நேரமே சிறந்தது.

5. உடல் தோரணையையிலும் கவனம்

நீங்கள் அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, வேறு எந்த வேலையாக இருந்தாலும் சரி, உங்கள் உடல் போஸ்சர் எனப்படும் உடல் தோரணையை கட்டுப்படுத்துவது முக்கியம். பெரும்பாலும் நாம் அலுவகத்தில், வீட்டில், உட்கார்ந்திருக்கும் இது குறித்து கவலைப்படாமல் புறக்கணிக்கிறோம். இதன் காரணமாகவும் தொப்பை அதிகரிக்கும். எப்போதும் நேராக, முதுகை வளைக்காமல் அமர்ந்து கொள்வது நல்லது. இதன் மூலம் கழுத்து வலியில் இருந்தும் தப்பிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது) .)

மேலும் படிக்க | Garlic Side Effects: அளவிற்கு மிஞ்சிய பூண்டு கல்லீரலை பாதிக்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News