புரதச்சத்து உடலுக்கு மிகவும் அவசியம் ஆனால் அளவுக்கு மிஞ்சினால்? என்ன ஆபத்து?

Protect your kidneys with Protein: அதிக புரதம், நமது சிறுநீரகத்தை கெடுக்கும். சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் புரதம் அதிகமாக உடலில் சேர்வதற்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துக் கொள்வோம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 3, 2023, 12:12 PM IST
  • அதிக புரதம் சிறுநீரகத்தை கெடுக்கும்
  • மோர் புரதம் உடலுக்கு நல்லது
  • அதிக புரதம் எடுத்துக் கொண்டால், அதிக நீர் பருகவேண்டும்
புரதச்சத்து உடலுக்கு மிகவும் அவசியம் ஆனால் அளவுக்கு மிஞ்சினால்? என்ன ஆபத்து? title=

ஊட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். நமது ஆரோக்கியத்திற்கு புரதச்சத்து தேவை. நமது தசைகளின் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் முக்கியமானது. தசை வளர்ச்சிக்காக, அதிக புரதத்தை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். புரதச்சத்து அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றித் தெரிந்துக் கொண்டால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத் தெரிந்துக் கொள்வீர்கள்.

அதிலும் அதிக புரதம், நமது சிறுநீரகத்தை கெடுக்கும். சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் புரதம் அதிகமாக உடலில் சேர்வதற்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துக் கொள்வோம்.
 
சிறுநீரக ஆரோக்கியம்
புரோட்டீன் சேதம் சிறுநீரகங்கள்
சிறுநீரகத்திற்கான புரத உணவு

மேலும் படிக்க | சூட்டை தணிக்கும் துளசி விதை..! கொட்டி கிடக்கும் கோடி மகத்துவம்

புரத உணவுகள் மற்றும் சிறுநீரக ஆரோக்கியம்
ஆரோக்கியமாக இருக்க, நல்ல மற்றும் சீரான உணவு அவசியம். ஒரு நல்ல உணவு என்பது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும். சரிவிகித உணவு என்பது அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஒன்றாகும். புரதமும் நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகங்கள் உட்பட உங்கள் உடலின் சில உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதிக புரத உணவுகள் உங்கள் சிறுநீரகங்களை நேரடியாகத் தாக்குவதில்லை, இதற்குப் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
 
புரத உணவு மற்றும் சிறுநீரகம்
அதிக புரதம் இரத்த நாளங்களின் அகலத்தை அதிகரிக்கிறது, இது குளோமருலர் வடிகட்டுதல் வீதத்தை அதிகரிக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீண்ட காலம் நீடிப்பது சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.   

மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!

உயர் புரத உணவுகள் யாருக்கு அதிக ஆபத்து?
ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிக புரதம் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு, தொடர்ந்து அதிக புரதத்தை உணவில் சேர்ப்பது பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்திவிடும். இது தவிர, அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கும், பல ஆண்டுகளாக தொடர்ந்து மது அருந்தி வருபவர்களுக்கும் புரதச்சத்து நிறைந்த உணவு கேடு விளைவிக்கும்.

மோர் புரதத்தை எடுத்துக் கொள்ளும்போது முன்னெச்சரிக்கைகள்
மோர் புரதம் என்பது புரதத்தின் தூய்மையான வடிவமாகும், பாலாடைக்கட்டி தயாரிப்பிற்குப்பிறகு மிஞ்சும் திரவத்தில் அபரிதமான புரதச்சத்து இருக்கிறது. அந்த திரவத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரத உருண்டைகளின் கலவை, மோர் புரதம் என்று அழைக்கப்படுகிறது.

சில ஆய்வுகளின் படி மோர் புரதம் உடல் வீக்கம் மற்றும் புற்றுநோய் உபாதைகளை எதிர்கொள்ளும் பண்புடையது. இந்த மோர் புரதத்தை பலர் புரத சப்ளிமெண்டாக எடுத்துக் கொள்வார்கள். இது, நல்லது என்று ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிடக்கூடியது. ஆனால், ஏற்கனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, மோர் புரதம் தீங்கு விளைவிக்கும்.

மேலும் படிக்க | Health Alert! 'இவற்றை' சாப்பிட்ட பிறகு பால் அருந்தக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்!

மோர் புரதத்தை எடுக்கத் தொடங்கினால், சிறுநீரக நிபுணரிடம் கலந்தாலோசிக்கவும். நீங்கள் புரத உணவில் கவனம் செலுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உலர் பழங்கள், சோயாபீன், குறைந்த கொழுப்புள்ள பனீர் மற்றும் பிற பால் பொருட்களை உங்கள் உணவில் பயன்படுத்தலாம். இது தவிர, சோயா பொருட்கள் புரதத்திற்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.
 
நிறைய தண்ணீர் குடிக்கவும்
அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்பவர்களும் சிறுநீரகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். மோர் புரதம் அல்லது அதிக புரத உணவுகளை உட்கொள்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிகப் புரதச்சத்து எடுத்துக் கொண்டு, அத்துடன் தண்ணீர் அதிகம் அருந்துபவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்படாது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆபத்து: இந்த அறிகுறிகள் தோன்றும், ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News