Tamilnadu Rain News Tamil | வங்க கடலில் உருவாகப்போகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வரும் 25, 26 ஆம் தேதிகளில் இரு நாட்களும் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பரவலாக பெய்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதனால் இன்று பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. இதேபோல் திருவாரூர், ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கனமழை காரணமாக விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 23 ஆம் தேதி உருவாக இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் அடுத்த வாரம் மீண்டும் கனமழை பெய்யும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திடையில் நகர்ந்து புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனக் கூறியுள்ளது. புயலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கன்னியாக்குமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடர்கிறது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பிரதீப் ஜான் சொல்லும் வானிலை
தனியார் வானிலை தகவல்களை தெரிவித்து வரும் பிரதீப் ஜான், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கலப்பட்டு ஆகிய மாவட்டங்களில் குளிர் அதிகம் இருக்கும் என கூறியுள்ளார். நாகை, தூத்துக்குடி, திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஆர்ப்பாரிக்கும் கும்பக்கரை அருவி... கனமழையினால் நீடிக்கும் தடை!
மேலும் படிக்க | விஜய் மாநாட்டிற்கு எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது? விசாரிக்கும் உளவுத்துறை!
மேலும் படிக்க | இடி மின்னல் தாக்கியதில் மின்சாதன பொருட்கள் சேதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ