அனைவருக்கும் இலவச பயணம்... இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் தேவையில்லை

ரயிலில் பயணம் செய்ய கட்டாயம் டிக்கெட் தேவை. ஆனால், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா... ஆம், இந்தியாவில் இப்படி ஒரு ரயில் இருக்கிறது, இதில் பயணம் செய்ய டிக்கெட் தேவை இல்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 20, 2024, 01:05 PM IST
  • வரலாறு மற்றும் பாரம்பரிய சிறப்பு மிக்க ரயில்.
  • மூன்று சுரங்கங்கள் மற்றும் ஆறு நிலையங்கள் கொண்ட ரயில் பயணம்.
  • பக்ரா-நாங்கல் அணையுடன் தொடர்புடைய ரயில்
அனைவருக்கும் இலவச பயணம்... இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் தேவையில்லை title=

இந்திய ரயில்வே நெட்வொர்க் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. தினமும் கோடிக் கணக்கான மக்களுக்கு போக்குவரத்தின் உயிர்நாடியாக செயல்படுகிறது இந்திய ரயில்வே. இந்திய ரயில்வே தினந்தோறும் 13,000க்கும் அதிகமான ரயில்களை இயக்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான பயணமாக இருப்பதால், பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்தியாவில், நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு செல்லும் நீண்ட ரயில் பயணங்கள் மட்டுமல்லாது,  குறுகிய பயணங்களுக்கும் ரயில் போக்குவர்த்து சிறந்த தேர்வாக உள்ளது என்றால் மிகையில்லை. 

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியுமா?

ரயிலில் பயணம் செய்ய கட்டாயம் டிக்கெட் தேவை. ஆனால், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா... ஆம், இந்தியாவில் இப்படி ஒரு ரயில் இருக்கிறது, இதில் பயணம் செய்ய டிக்கெட் தேவை இல்லை. இந்த ரயிலில் TTE என்னும் டிக்கெட் பரிசோதகருக்கு வேலை இல்லை.

இலவச ரயில் பயண வாய்ப்பு

பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் இடையே இயக்கப்படும் ரயில் பக்ரா-நங்கல் ரயில் என்று அழைக்கப்படுகிறது. 13 கிலோமீட்டர் தூரம்  இயங்கும் இந்த ரயில் கடந்த 75 ஆண்டுகளாக எந்தவிதக் கட்டணமும் இன்றி பயணிகளை அழைத்துச் செல்கிறது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து ஒரு பைசா கூட வசூலிக்கப்படுவதில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம். 

மூன்று சுரங்கங்கள் மற்றும் ஆறு நிலையங்கள் கொண்ட ரயில் பயணம்

பக்ரா-நங்கல் ரயில் பாதை இயற்கை அழகு நிறைந்தது. இந்த ரயில் சட்லஜ் ஆற்றைக் கடந்து சிவாலிக் மலைகள் வழியாக செல்கிறது. பயணத்தின் போது, ​​இந்த ரயில் மூன்று சுரங்கப்பாதைகள் மற்றும் ஆறு நிலையங்கள் வழியாக செல்கிறது. இது பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை அளிக்கிறது. இந்த ரயில் அதன் 30 நிமிட பயணத்தில் சுமார்  27.3 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், சுமார் 155 மீட்டர் உயரமுள்ள ரயில் பாலம் ஆகியவற்றை இந்த ரயில் கடந்து செல்கிறது.

பாரம்பரிய அம்சங்கள் கொண்ட ரயில்
 
மரத்திலான  நாற்காலிகள் கொண்ட இந்த ரயிலில் மூன்று பெட்டிகள் மட்டுமே உள்ளன. இதில் உள்ள மர நாற்காலிகள் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்தவை. அவை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் சிறப்பு. இந்த ரயில் தொடங்கப்பட்ட போது, ​​நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. பின்னர் 1953ம் ஆண்டில் அதில் டீசல் என்ஜின்கள் நிறுவப்பட்டன.

மேலும் படிக்க | IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டு

பக்ரா-நாங்கல் அணையுடன் தொடர்புடைய ரயில்

1948-ல் பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது, ​​தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்ல இந்த ரயில் இயக்கப்பட்டது. அணைப் பணிகள் முடிந்ததும், இந்த ரயில் சேவையை நிறுத்தாமல், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்காக இயக்க முடிவு செய்யப்பட்டது. இன்றும் பக்ரா-நாங்கல் ரயிலில் தினமும் சுமார் 800 பேர் பயணிக்கின்றனர். இந்த ரயில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் இந்த இலவச பயணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு இடங்கள்

இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் இயற்கை அழகைக் காண விரும்புவோருக்கு இந்த ரயில் சிறந்த தேர்வாக இருக்கும். சட்லஜ் நதிக்கும் ஷிவாலிக் மலைகளுக்கும் இடையே இந்த ரயிலில் பயணம் செய்வது ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.

வரலாறு மற்றும் பாரம்பரிய சிறப்பு மிக்க ரயில்

பக்ரா-நங்கல் ரயில் என்பது வெறும் போக்குவரத்துச் சாதனம் மட்டுமல்ல, நமது நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியம் உயிரோட்டமாக இருப்பதன் எடுத்துக்காட்டாகும். அதன் பெட்டிகள், என்ஜின்கள் மற்றும் வழித்தடங்கள் அனைத்தும் சேர்ந்து நாட்டில் பெரிய அணைகள் மற்றும் திட்டங்கள் தொடங்கப்பட்ட காலத்தை நினைவூட்டுகின்றன.

மேலும் படிக்க |  இந்திய ரயில்வேயின் சூப்பர் செயலி... இனி இதன் மூலம் தான் டிக்கெட் புக்கிங்... விரைவில் அறிமுகம்
 

 

Trending News