கோடைகாலம் தொடங்கியிருக்கும் நிலையில் மார்கெட் உள்ளிட்ட இடங்களில் மாம்பழங்கள் கண்களை பறிக்கின்றன. வகைவகையான மாம்பழங்கள் குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை கோடை காலங்களில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
செரிமான மேம்பாடு
கோடையில் மாம்பழம் சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகளையும் போக்கும். உண்மையில் மாம்பழங்களுக்கு வயிற்று சுத்திகரிப்பு பண்புகள் உள்ளன. இவை சிறந்த மற்றும் இயற்கையான மலமிளக்கியும் கூட. அதனால் மாம்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாது.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்...!
இதய பாதுகாப்பு
மாம்பழத்தை உட்கொள்வது இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். உண்மையில், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. கற்கள் உள்ளிட்ட ரசாயனங்களில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உடலுக்கு தீங்கானவை.
கொழுப்பை குறைக்கும்
கொழுப்பின் அபாயத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பவர்கள் மாம்பழங்களை சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள நியூட்ராசூட்டிகல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
புற்றுநோய்க்கு எதிர்ப்பு
மாம்பழம் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. மா பழத்தின் சாறில் கரோட்டினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், டெர்பெனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவையெல்லாம் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போரிட்டு அதன் அபாயத்தை குறைக்கும்.
விந்தணு உற்பத்தி
மாம்பழத்தில் பாலுணர்வுக்கான கூறுகள் உள்ளது. இது உடலுறவுக்கான விருப்பத்தை அதிகரிக்கும். மாம்பழங்களில் உள்ள வைட்டமின்-E மற்றும் பீட்டா கரோட்டின் கலவையானது விந்து அழிவைத் தடுக்கிறது. கோடையில் பார்ட்னருடன் உற்சாகமாக இருக்க மாம்பழம் சாப்பிடுங்கள்.
மேலும் படிக்க | சம்மரில் இதை செய்யவே செய்யாதிங்க... நோய்களில் இருந்து தப்பிக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ